Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
தித்திக்கும்... பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
மேலும் இது கோடையில் தான் அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை வாங்கி குடியுங்கள். இங்கு பதநீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் உஷ்ணம்
கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.

சோர்வை நீக்கும்
கோடையில் அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சோர்வானது பதநீர் குடிப்பதால் நீங்கும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.

ஆரோக்கியமான பற்கள்
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.

பித்தம் குறையும்
கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.

இல்லற வாழ்வு இனிக்கும்
பதநீர் காதல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வைத்து, இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.



Click it and Unblock the Notifications
