For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளி பிடித்திருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

By Maha
|

குளிர்காலம் என்பதால் சளி, காய்ச்சல் போன்றவற்றால் நிறைய அவஸ்தைப்படுவோம். இப்படி சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும்.

அதற்கு சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவற்றைத் தவிர்க்கவும் வேண்டும். இங்கு சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களை சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க்கிருமிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஆகவே சளி பிடித்திருந்தால், பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

அசிட்டிக் உணவுகள்

அசிட்டிக் உணவுகள்

அசிட்டிக் உணவுகளை சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாது. இறைச்சிகளில் அசிடிட்டி அளவு அதிகமாக இருப்பதால், அது உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் உடலில் அசிடிட்டியின் அளவு, உட்காயங்கள் அதிகரிக்கும்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சளி பிடித்திருக்கும் போது சாப்பிடலாம். ஆனால் செயற்கை சர்க்கரை கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை உடலினுள் காயங்களை அதிகரித்து, உடலை மேலும் வலுவிழக்கச் செய்யும்.

கொழுப்புமிக்க உணவுகள்

கொழுப்புமிக்க உணவுகள்

கொழுப்புமிக்க உணவுகளில் ஃபேட்டி அமிலங்கள் அதிகம் உள்ளதால், அவை உடலுக்கு பெரும் தொந்தரவைக் கொடுக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளையோ, ஜங்க் உணவுகளையோ சளி பிடித்திருக்கும் போது, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஒரு பெக் அடித்தால், எப்பேற்பட்ட சளியும் நீங்கும் என்ற பல ஆண்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவு மட்டுமின்றி, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லை மற்றும் கலோரிகள் ஏராளமாக உள்ளது. இத்தகைய உணவை உடல்நிலை சரியில்லாத காலத்தில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துவிடும். எனவே இந்த மாதிரியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

ஜூஸ்

ஜூஸ்

ஜூஸ் எவ்வளவு தான் ஆரோக்கியமான ஓர் பானமாக இருந்தாலும், சளி பிடித்திருக்கும் தருவாயில், இதனைக் குடித்தால் அதில் உள்ள சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை இழக்கச் செய்துவிடும். ஆகவே நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்தில் ஜூஸ் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Avoid When You Have A Cold

Here are some foods you should avoid when you have a cold. If you consume these foods your flu will increase drastically, therefore it is best to stay away.
Desktop Bottom Promotion