Latest Updates
-
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க..
சிறுநீர் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்!!
தினமும் குறைந்து ஆறேழு முறை சிறுநீர் கழிக்கும் நாம், அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருப்பதை கவனிப்பதே இல்லை என்பது தான் உண்மை. சிறுநீர் என்பது நமது உடலில் சேரும் நீர் உணவுகளில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட பிறகு, கழிவாக வெளிவரும் ஒன்று என்பது மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் அறிந்தது.
நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க..
ஆனால், இதை தாண்டி சிறுநீர் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை முக்கியமான விஷயங்கள் சிலவன இருக்கின்றன....
ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

சிறுநீர் நீர்ப்பை அளவு
நமது சிறுநீர் நீர்ப்பையில் அதிகபட்சம் ஒவ்வொரு இரண்டு மணிநேர இடைவேளையிலும், இரண்டு கப் நீர் வரை சேமிக்க முடியும். இது நீங்கள் உட்கொள்ளும் நீரின் அளவை பொருத்தது.

சிறுநீரின் நாற்றம்
நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அமோனியம் நாற்றம் வந்தால், உங்கள் உடலின் நீரின் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம். இதுவே, கெட்ட நாத்தம் அடித்தால், உங்கள் சிறுநீர்ப்பையில் ஏதோ தொற்று ஏற்பட்டுள்ளது என அர்த்தமாகும். கல்லீரலில் தொற்று ஏற்பட்டால் கூட, இவ்வாறான கெட்ட நாற்றம் ஏற்படும் என கூறுகிறார்கள்.

ஆறு லிட்டர்
சாதாரணமாக நல்ல நலத்துடன் இருக்கும் ஓர் நபருக்கு அதிகபட்சமாக ஆறு லிட்டர் வரை சிறுநீர் ஓர் நாளுக்கு வெளிப்படும் என கூறப்படுகிறது.

3-5 மணிநேரம்
நீங்கள் உட்க்கொளும் நீரின் அளவை பொறுத்து, மூன்றில் இருந்து ஐந்து மணி நேரம் வரை உங்கள் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

மூளைக்கு செல்லும் சிக்னல்
ஒவ்வொரு முறையும் உங்கள் சிறுநீர்ப்பை நிரம்பும் போதும், உங்கள மூளைக்கு ஓர் சிக்னல் போகும். அதனால் தான் நீங்கள் சிறுநீர் கழிக்க செல்கிறீர்கள்.

6-8 முறை
உங்களது நலன் சரியாக இருந்தால் ஒரு நாளுக்கு ஆறில் இருந்து எட்டு முறை நீங்கள் சிறுநீர் கழிக்க செல்வீர்கள். இது நீங்கள் உட்கொள்ளும் நீரின் அளவை பொருத்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரில் இருக்கும் முக்கிய அங்கங்கள்
சிறுநீரின் முக்கிய அங்கங்களாக இருப்பவை, கிரியேட்டின், யூரிக் அமிலம் மற்றும் இரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகள்.

வயதான பிறகு
உங்களுக்கு வயதான பிறகு, நீங்களாக சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்கள். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன், மற்றும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவில் குறைவு ஏற்படுவதால், இது அவசியம் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
