For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கமின்மையால் ஏற்படும் அபாயமான உடல்நல பாதிப்புகள்!!

|

உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இடம் இந்த மூன்றுக்கும் இணையாக அடுத்து ஓர் மனிதனுக்கு மிகவும் அவசியமானது நல்ல உறக்கம். நன்கு உழைத்தால் நல்ல உறக்கம் வரும் என்பார்கள். ஆனால், இன்று கணினி முன் அமர்ந்து நாள் முழுக்கு உழைத்தால் கடும் நோய்கள் தான் வருகின்றன.

எனவே, நாம் நமது வாழ்வியல் முறை மற்றும் வேலை முறையை சரியாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் உடல்நிலை குறைபாடுகள் தான் ஏற்படும். தூக்கமின்மை காரணமாக மட்டும் உங்கள் உடலில் நிறைய உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமாக உடல் எடை, மன அழுத்தம், இதய பிரச்சனைகள் போன்றவை ஆகும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

ஜன்க் புட்ஸ் மட்டுமின்றி, சரியான அளவு தூங்காமல் இருப்பதும் கூட உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும். இதனால் மயக்கம், உடல் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எலும்பு பாதிப்பு

எலும்பு பாதிப்பு

ஓர் நாளுக்கு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவது எலும்புகளை வலுவாக பாதிக்கும். முக்கியமாக எலும்புகளில் இருக்கும் மினரல்ஸ் அளவு குறைந்துவிடும். இதனால் எலும்பு வலிகள் அதிகமாக வாய்ப்புகள் உண்டு.

புற்றுநோய்

புற்றுநோய்

சரியான அளவு உறங்காமல் இருப்பது மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை உடலில் நச்சுக்களை எதிர்த்து போராடும் திறனை குறைத்துவிடுகிறது.

மாரடைப்பு

மாரடைப்பு

நாம் உறங்கும் நேரத்தில் தான் நமது உடல் உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் சரியாக்கப்படுகின்றன மற்றும் நச்சுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் தான் காலையில் எழுந்ததும் நீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவற்றை நீங்கள் சரியாக செய்யவில்லை எனில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

நினைவாற்றல்

நினைவாற்றல்

சரியான அளவு தூங்காமல் இருப்பது மூளையை சோர்வடைய வைக்கிறது. உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமின்மை காரணத்தால் நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.

சிறுநீர் அடங்காமை

சிறுநீர் அடங்காமை

தூக்கமின்மை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை உண்டாகும். சிறுநீரை சிறிது நேரம் கூட அடக்கி வைக்க முடியாது.

பதட்டம், மன சோர்வு

பதட்டம், மன சோர்வு

தூக்கமின்மையால் ஏற்படும் மிகப்பெரிய குறைபாடு மன அழுத்தம் மற்றும் பதட்டம் தான். இது மெல்ல மெல்ல, மற்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட காரணமாக விளங்குகிறது.

உடல் எடை

உடல் எடை

மன அழுத்தத்திற்கு பிறகு தூக்கமின்மை காரணமாக ஏற்படும் எடுத்த பிரச்சனை உடல் பருமன். இன்றைய ஐ.டி மக்களில் பெரும்பாலும் அனைவரும் உடல்பருமனோடு இருப்பதற்கு காரணம் அவர்களது வேலை சுழற்சி முறையால் ஏற்படும் தூக்கமின்மை தான். இதனால் கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்து உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Diseases Caused By Incomplete Sleep

poor sleep effects on health are many that we usually ignore. But you will end up having many serious diseases if you sleep less.
Desktop Bottom Promotion