வாரம் தவறாமல் பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஏழைகளின் ஆப்பிள், இந்தியாவின் ஆப்பிள் என்று புகழப்படும் பழம் பேரிக்காய். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய பழம் பேரிக்காய். இது கர்ப்பிணி பெண்களுக்கும் ஆரோக்கிய பயன்கள் தரவல்லது. பேரிக்காயில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்து நமது உடலுக்கு மிகவும் தேவையானது.

மேலும், எலும்பு, பற்கள், செரிமானம், இதய நலன் என பல வகையில் பேரிக்காய் ஆரோக்கிய நலன் தரவல்லது......

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிளை விட சிறந்தது

ஆப்பிளை விட சிறந்தது

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்த பழமாகும். இதில் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் ஏ சத்து நிறைய உள்ளது. ஆப்பிளை விட விலையில் மலிவான இது, நிறைய மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. உடலுக்கு தேவையான நல்ல சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் இதிலிருந்து கிடைக்கும்.

எலும்பு வலிமை

எலும்பு வலிமை

எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடலாம், இது நல்ல வலுவடைய உதவுகிறது.

செரிமானம்

செரிமானம்

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை வலுவடைய, நல்ல ஆற்றல் தருகிறது பேரிக்காய். இதை அடிக்கடி சாப்பிட்டால் நல்ல பசியும் எடுக்கும். செரிமானமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும் பேரிக்காய்க்கு உண்டு.

இதய படபடப்பு

இதய படபடப்பு

தீடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல தீர்வுக் காண முடியும்.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால் சுரக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eat Pear Daily For Amazing Health Benefits

Eat Pear Daily For Amazing Health Benefits.
Subscribe Newsletter