Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
பிறப்புறுப்பை பாதிக்கும் விந்தணுக்களால் ஏற்படும் அலர்ஜி பற்றி உங்களுக்கு தெரியுமா???
சிலருக்கு தூசு என்றால் அலர்ஜியாக இருக்கும், சிலருக்கு புகை என்றால் அலர்ஜியாக இருக்கும், இது போல மது, சூட்டை கிளப்பும் உணவுகள், கடல் உணவுகள் என எத்தனையோ வகையில் அலர்ஜிகள் ஏற்பட்டு பார்த்திருப்போம்.
விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!!!
ஏன் உங்களுக்கே கூட சில அலர்ஜிகள் தோன்றியிருக்கலாம். ஆனால், ஆண்களின் விந்தணுக்களால் கூட பிறப்புறுப்பில் அலர்ஜிகள் ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா???
ஆணுறுப்பின் அழகு இதுதானாம்... பெண்களே கூறுகிறார்கள்!!!

12% பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
ஏறத்தாழ உடலுறவில் ஈடுபடும் பெண்களில் 12% பெண்கள் விந்தணு அலர்ஜியால் பாதிக்கப்படுகிறார்கள். பலருக்கும் இது, விந்தணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்பதே தெரிவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பால்வினை நோயா??
விந்தணு அலர்ஜியால் பிறப்புறுப்பில் தாக்கம் ஏற்படும் நபர்கள், தங்களுக்கு பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அச்சம் கொள்கின்றனர். ஆனால், இந்த அச்சம் தேவையில்லை, இது சாதாரண அலர்ஜியை போன்றது தான் என கூறப்படுகிறது.

விந்தணு புரதம்
ஆண்களின் விந்தணுவில் உயர்ரக புரதம் இருக்கிறது. இது சில பெண்களின் உடலுக்குள் செல்லும் போது, ஆரம்பத்தில் ஒத்துபோவதில்லை. அவர்களது உடல் செல்கள் இதை எதிர்க்க முற்படும் போது முதலில் இது போன்ற அலர்ஜிகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலப்போக்கில் இது சரியாகிவிடும்.

சரியான நேரத்தில் பரிசோதனை
ஆனால், இது போன்ற அலர்ஜி பிறப்புறுப்பில் ஏற்படுகிறது என தெரிந்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள், வேறு சில தொற்றுகளால் கூட பெண்களின் பிறப்புறுப்பில் அலர்ஜிகள் ஏற்படலாம்.

20 முதல் 30 வயது பெண்கள்
இந்த விந்தணு அலர்ஜி பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தான் ஏற்படுகிறது என மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைகழகத்தின் இனப்பெருக்க அறிவியல் பேராசிரியர் டாக்டர். மைக்கேல் கர்ரோல் கூறியுள்ளார்.

விந்தணு அலர்ஜி அறிகுறிகள்
பெண்களின் பிறப்புறுப்பு இடத்தில் சிவந்து காணப்படுவது, வீக்கம், வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை மருத்துவர்கள் விந்தணு அலர்ஜியின் அறிகுறிகள் என கூறுகிறார்கள்.

ஒரு மணி நேரத்தில் அறிகுறி
விந்தணு அலர்ஜி ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் அறிகுறிகள் உடனே தோன்ற ஆரம்பிக்கும் எனவும் டாக்டர் மைக்கேல் கூறியுள்ளார்.

வெவேறு நபர்களுடன் உறவுக் கொள்ளுதல்
வெவ்வேறு நபர்களோடு உடலுறவில் ஈடுபட்டால் கூட இது போன்று விந்தணு அலர்ஜி ஏற்படலாம் எனவும் கூறுகிறார்கள்.

ஆணுறை பயன்படுத்தலாம்
ஒருவேளை தொடர்ந்து இந்த விந்தணு அலர்ஜி ஏற்பட்டால் இதை தடுக்க ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தலாம். இது, விந்தணு அலர்ஜி ஏற்படாமல் தவிர்க்க உதவும் என கூறப்படுகிறது.

கர்ப்பம் அடைவதில் எந்த பிரச்சனையும் இல்லை
விந்தணு அலர்ஜி ஏற்படுவதால், கர்ப்பம் அடைய முடியாது என சிலர் எண்ணுவதுண்டு. அப்படி ஏதுமில்லை. விந்தணு அலர்ஜி இருந்தாலும் கூட, இயற்கையாக உடலுறவு கொண்டாலே கருத்தரிக்க முடியும் என கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
