Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பலரும் அறியாத ஓமத்தின் மருத்துவ குணங்கள்!!!
சமையலில் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்று தான் ஓமம். இது சீரக வகையை சேர்ந்தது. இது நல்ல நறுமணத்துடன் இருப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் தன்னுள் உள்ளடக்கியது.
அதில் புரோட்டீன், மாவுப் பொருட்கள், வைட்டமின்களான கரோட்டீன், தையமின், நிகோடினிக் அமிலம் போன்றவையும், கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் நிறைந்தது.
இதனால் உடலின் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். இங்கு மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமம் கொண்டு என்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என்ற கொடுக்கப்பட்டுள்ளது.

வயிற்று கோளாறுகள்
ஓமத்தை நீரில் போட்டு காய்ச்சி, குளிர வைத்து, அதனை குடித்து வந்தால், செரிமான பிரச்சனை, வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்ற பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும்.

வாய் பிரச்சனைகள்
வாய், நாக்கு போன்றவற்றில் புண் இருந்தாலோ அல்லது ஈறு பிரச்சனைகள் இருந்தாலோ, அவற்றிற்கு ஓமம் நல்ல தீர்வைத் தரும். அதற்கு ஓமம் மற்றும் சோம்பை பொடி செய்து, தேன் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

ஆஸ்துமா
ஆஸ்துமாவிற்கு ஓமம் நல்ல நிவாரணியாக விளங்கும். அதற்கு ஓமத்தை கசாயம் செய்து தொடர்ந்து குடிக்க வேண்டும்.

மூச்சுத்திணறல்
ஓமத்தை வறுத்து ஒரு துணியில் போட்டு, மார்புக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், மூச்சுத்திணறல் குறையும்.

குளிர் காய்ச்சல்
ஓமம் மற்றும் சோம்பை பொடி செய்து, தேனுடன் சேர்த்து குலைத்து சாப்பிட, குளிர் காய்ச்சல் குணமாகும்.

குழந்தை களின் வயிற்று வலி நீங்க...
ஓமம், ஜாதிக்காய், ஏலக்காயை சம அளவில் எடுத்து பொடி செய்து, தாய்பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிற்று வலி அகலும்.



Click it and Unblock the Notifications
