Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம் - ஆய்வில் தகவல்
ஒருவரின் மரணத்தை தெரிந்து கொண்டால், வாழும் நாட்கள் கொடியதாகிவிடும் என்று பலருக்கும் தெரியும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தங்களின் மரணம் எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இத்தகையவர்களுக்காக ஓர் எளிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் வாழ்நாள் மற்றும் முதுமை போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்படியான இரத்த பரிசோதனை முறை வெளிவரவிருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

செல்கள் மற்றும் குரோமோசோம்கள்
ஒருவரின் உடலில் இருக்கும் இரத்த செல்களை துல்லியமாக கணக்கிடுவது மற்றும் குரோமோசோம்களின் அளவு, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாள், அவருக்கு வரப்போகும் நோய்கள் என்னவென்று கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வாளர்
இந்த சோதனையைப் பற்றி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருத்து மைய செல் பயாலஜி பிரிவு வல்லுநர் ஜெர்ரி ஷே கூறியுள்ளார்.

டாக்டர். ஜெர்ரி ஷே
டாக்டர். ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவ குழு தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனையானது இரத்த செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்னும் குரோமோசோம்கள் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த இரத்த பரிசோதனை குறித்து ஜெர்ரி கூறியதாவது, விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் முதுமை, எப்போது இறக்கப் போகிறார் என்பது மட்டுமின்றி, என்ன நோய்கள் தாக்கக்கூடும் என்பதை அறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த நோய்கள் தாக்காமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பயாலாஜிக்கல் ஏஜ்
சிலர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். அதற்கான காரணங்களையும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் டாக்டர் ஜெர்ரி கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
