Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வாங்கவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
நூறு வருஷம் இல்லாட்டியும், உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை!!!
அனைவருமே தங்களது வாழ்க்கை நன்கு வளமாகவும், ஆரோக்கியமாகவும் அமைய வேண்டும் என தான் விரும்புவார்கள். ஆனால், அதற்கான வழியை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள், சிலர் தெரிந்தும் பின் தொடராமல் இருப்பார்கள். அவரவர்களது வேலைபாடுகள் சிலருக்கு இடர்பாடாக அமைந்துவிடும். நேரத்திற்கு உணவருந்தாது இருப்பது, தூங்காமல் இருப்பது, புகை, மது போன்ற பழக்கங்கள் அலுவலக பிரச்சனைகள், மன அழுத்தம், போத குறைக்கு புதிது புதிதாக நோய்கள் என பல விஷயங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தை சுற்றியும் குறி வைத்து நிற்கும். இதை எல்லாம் கடந்து உங்களது ஆரோக்கியத்தை நீங்கள் வளமாக, நலமாக வைத்துக்கொள்ள, நூறு வருடங்கள் இல்லாவிட்டாலும் உயிருள்ள வரை நல்ல உடல் நலத்தோட வாழ நீங்கள் சில சட்டத்திட்டங்களை பின் பற்ற வேண்டும். சரி, இனி நூறு வருஷம் இல்லாட்டியும், உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

உடற்பயிற்சி
என்னதான் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டாலும், உடற்திறன் நன்றாக இருந்தால் தான் வலிமையாக இருக்க முடியும். எனவே, உங்களது ஆரோக்கியத்திற்காக நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

சரியான உணவு
நீங்கள் உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தினசரி வழங்குவது உங்களது ஆரோக்கியத்தை வளமாக வைத்துக்கொள்ளும்.

உடல் பருமன்
உங்களது உடல் எடையை சரியான அளவில் பேணிக்காக்க வேண்டும். மிகவும் ஒல்லியாகவும் இருக்க கூடாது. மிகவும் குண்டாகவும் இருக்க கூடாது. எனவே, உங்கள் உடல் எடையும் ஒருவகையில் உங்களது உடல்நலத்தை பாதுகாக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மது
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இது மதுவிற்கு நன்றாக பொருந்தும். சிறு அளவான மதுவின் பங்கு நமது உடலுக்கு தேவைப்படுகிறது என மருத்துவர்களே கூறுகின்றனர்.ஆனால், அதன் மிகுதியான பங்கு உங்கள் உயிரையே பறித்துவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

புகை ஆரோக்கியத்திற்கு பகை
புகை பழக்கம் பலரது ஆரோக்கியத்தை வெகுவாக குறைக்கிறது. எனவே, உங்களது ஆரோக்கியம் நலமாக இருக்க வேண்டும் எனில் புகை பழக்கத்தை கைவிடுங்கள்.



Click it and Unblock the Notifications