ஆணுறுப்பு விறைக்கவில்லையா? அப்போ காரணம் இதுவா இருக்குமோ...?

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விறைக்காமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. இது;gபோல விறைப்படையாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு உடநல காரணங்களினால் உட்கொ;sளும் மருந்துகளினால், அல்லது அவையின் பக்கவிளைவுகளால் விறைப்படையாமல் போகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் குறைவு எற்பட்டால் விறைப்படையாமல் போகலாம். இதுப்போல சில மருத்துவ காரணங்களால் ஆண்களுக்கு விறைப்படையும் தன்மை குறையலாம்.

விறைப்புத்தன்மை பத்தி ஆம்பளைங்க தெருஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!

இதை தவிர, ஆண்களின் தீய பழக்கவழக்கங்களால் கூட விறைப்படையாமால் போகலாம், போதைப்பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள். வீண் கோபத்தினால் ஏற்படும் மன சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணங்களினால் கூட விறைப்படையும் தன்மை குறைவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். முடிந்த வரை அலுவலக வேலை காரணமாகவோ அல்லது வீட்டின் பொருளாதார காரணமாகவோ பதட்டமடைவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். இந்த பதட்டத்தினால் தான் அதிகமாக மன கவலை, உடல் சோர்வு ஏற்படுகிறது. இப்படி வீணாக பதற்றமடைவதனால் உங்களுக்கு விறைப்படையாமல் போக வெகுவாக வாய்ப்புகள் உள்ளதாய் நிபுணர்கள் கூறுகின்றனர். சரி இனி ஆண்களுக்கு விறைப்படையாமல் போவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்...

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமன்

உடல் பருமன்

ஆண்களுக்கு உடலுறவு கொள்ளும் போது. விறைப்படையாமல் போவதற்கோ அல்ல, விறைப்பு தன்மை குறைவதற்கோ முக்கியக் காரணமாக கூறப்படுவது உடல் பருமன். எனவே, ஆண்கள் உடல் பருமனை சரியான அளவில் கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

உடல் ரிதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டு இருந்தாலும் கூட, ஆண் குறி விறைப்படையாமல் போகலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

போதை பழக்கங்கள்

போதை பழக்கங்கள்

ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்படையாமல் போவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, போதைப்பழக்கம். போதை பழக்கத்திற்கு ஆளாவதனால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியும், ஆண்மை குறைவும் ஏற்படுகிறது.

மருந்துகளின் பக்கவிளைவாக

மருந்துகளின் பக்கவிளைவாக

ஒருவேளை ஆண்களுக்கு எதாவது உடல்நல கோளாறு, நோய், அல்லது சிகிச்சை காரணமாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் காரணமாக கூட உடலுறவு கொள்ளும் போது ஆண்குறி விறைப்படையாமல் போகலாம்.

சிறுநீரக கோளாறு

சிறுநீரக கோளாறு

ஆண்களுக்கு சிறுநீரக கோளாறு அல்லது சிறுநீர் பாதையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் கூட உடலுறவுக்கொள்ளும் போது விறைப்படையாமல் போகலாம்.

சூழ்நிலை காரணங்கள்

சூழ்நிலை காரணங்கள்

சில ஆண்களுக்கு வீட்டில் அதிகம் நபர்கள் இருந்தாலோ, அல்லது சத்தத்தின் இரைச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது உடலுறவு கொள்ளும் அறையில் வெளிச்சம் இருந்தாலோ கூட விறைப்படையாமல் போக வாய்ப்புகள் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்படையாமல் போவதற்கான இன்னொரு காரணமாக மருத்துவர்கள் கூறுவது, ஆண்களின் தேவையற்ற மன அழுத்தங்கள். இது அவர்களின் உடல்நிலையையும், மன நிலையையும் வெகுவாக பாதிக்கிறது. இது கூட ஆண்களுக்கு பல சமயங்களில் விறைப்படையாமல் போக காரணமாக இருக்கிறது என கூறுகின்றனர்.

நரம்பியல் பிரச்சனைகள்

நரம்பியல் பிரச்சனைகள்

ஆண்களுக்கு நரம்பியல் கோளாறுகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் உடலுறவு கொள்ளும் போது விறைப்படையாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன. இது காரணமாக இருந்தால், ஆண்கள் கட்டாயம் மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் ரீதியான காரணங்கள்

உடல் ரீதியான காரணங்கள்

உடலுறவின் போது விறைப்படையாமல் போவதற்கான உடல் ரீதியான காரணமாய், நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, புரோஸ்டேட் சுரப்பியில் கோளாறு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மற்ற காரணங்கள்

மற்ற காரணங்கள்

தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, ஆண்குறியில் தொற்று நோய்கள் அல்லது காயம் போன்றவை ஆண் குறி விறைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Reasons Of Erection Problems For Men

Do you know about the reasons of erection problems for men, read here.
Subscribe Newsletter