Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான சில வழிமுறைகள்!!!
சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் எச்சரிக்கையை எத்தனை முறை படித்திருந்தாலும் கூட, அந்த பழக்கத்தை பலராலும் அவ்வளவு சுலபத்தில் கைவிட முடிவதில்லை. அதற்கு காரணம் சிகரெட்டில் உள்ள நிகோடின்.
ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே இந்த பழக்கத்தை கைவிட வேண்டுமானால், அது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பல வழிகள் உள்ளது. இந்த பழக்கத்தை கைவிட இவைகள் அனைத்தும் சிறந்த வழியாக
கருதப்படுகிறது. ஆனால் இப்பழக்கத்தை கைவிட தீவிரமான நாட்டம் உடையவர்கள் கூட தோற்றுப் போவார்கள். அதற்கு காரணம் கைவிடும் அறிகுறிகளை கையாள முடியாத இயலாமை ஆகும்.
இதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டால், இப்பழக்கத்தை கைவிடுவதில் உதவியாக இருக்கும். இப்பழக்கத்தை கைவிட, இதோ உங்களுக்கான சில எளிய டிப்ஸ்...

மன உறுதி
சிகரெட்டை ஒவ்வொரு முறை இழுக்கும் போதும் அதனை கைவிட்டு விடுவேன் என்று சபதம் எடுப்பதில் பயனில்லை. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு முன், வலிமையான மன உறுதியை கொண்டு வர வேண்டும். நீங்கள் வலிமையான மன உறுதியுடன் இருந்தால், இந்த பழக்கத்தை கைவிட இதுவே ஒரு சிறந்த வழியாக செயல்படும்.

திசை விலகல்
உங்கள் மனம் சிகரெட்டை பிடிக்க தூண்டும் போது, உங்கள் எண்ணத்தை வேறு எதன் மீதாவது செலுத்துவதும் ஒரு நல்ல ஐடியாவாகும். அதற்காக சமுதாயத்தோடு ஒன்றிடும் செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு நடை கொடுங்கள் அல்லது வெளியே சென்று விளையாட்டில் ஈடுபடுங்கள்.

கவுன்செலிங் பெற்றிடுங்கள்
புகைப்பிடுக்கும் பழக்கத்தை கைவிட எந்த வழிமுறை உங்களுக்கு தோதாக அமையும் என்பதை வல்லுனர்களின் கருத்தை கேட்டு தெரிந்து கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள். இப்படி செய்வதால் இந்த பழக்கத்தை கைவிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை உங்களுக்கு உதவி புரியும். கவுன்செலரின் ஆதரவு இருக்கும் போது உணர்ச்சி ரீதியான மாற்றங்களையும் சுலபமாக கையாளலாம்.

நிகோடின் மாற்று தெரபி
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவும் வழிமுறைகளில், சிறந்த ஒன்றாக விளங்குகிறது நிகோடின் மாற்று தெரபி. இப்பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் நோய்குறிகளை நீக்க இந்த வழிமுறை உதவும். குறைவான நிகோடின் அளவை
தொடர்ச்சியாக உங்கள் உடலுக்கு செலுத்தும் செயல்முறையால் இது சாத்தியமாகிறது.

கவர்ந்திழுப்புகளை தூர எறியுங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு உள்ள வழிமுறைகளில் இதுவும் முக்கியமான ஒன்று. உங்கள் வீடு, கார் மற்றும் அலுவலகங்களை புகைப்பிடிக்காத இடமாக மாற்றுங்கள். சிகரெட், இதர புகையிலை பொருட்கள், லைடர்கள் மற்றும் ஆஷ் ட்ரேக்களை தூரப் போடுங்கள்.

குடும்ப ஆதரவை பெற்றிடுங்கள்
நீங்கள் இந்த பழக்கத்தை கைவிடும் நாளை எண்ணி உங்கள் குடும்பமே காத்து கிடக்கும். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் இந்த செயல்முறையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் பெரும் ஆதரவும் அக்கறையும் உங்களுக்கு இந்த பழக்கத்தை கைவிட பெரிதும் உதவியாக இருக்கும்.

சுறுசுறுப்பாக இருங்கள்
சோம்பலான மனது பேய்களின் இருப்பிடம் என்று சொல்வார்கள். ஆனால் அது அதோடு நிற்காமல் உங்களை மீண்டும் புகைப்பிடிக்க தூண்டி விடும். அதனால் சுறுசுறுப்பாக செயல்படுவதும் கூட இந்த பழக்கத்தை கைவிடும் ஒரு வழிமுறையாகும். அப்படி இருக்கும் போது இந்த பழக்கத்தை விட்டு விடலாம். அதனால் உங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

தீவிர நாட்டத்தை கடந்து வாருங்கள்
உங்கள் உயிரை கொள்ளும் அனைத்து வகையான கவர்ந்திழுப்புகளிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை அந்த பழக்கத்திற்கு மீண்டும் தூண்டுபவர்களிடம் தைரியமாக 'முடியாது' என்று சொல்லுங்கள். சிகரெட் மீது தீவிரமான நாட்டம் ஏற்படும் போது ஆழமாக மூச்சு விடுங்கள். ஒரு கட்டுப்பாட்டு நிலைக்கு நீங்கள் வந்து விட்டால், இப்பழக்கத்தை சுலபமாக விட்டு விடலாம்.

மாற்று வழியை பின்பற்றுவது
சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை மறக்க மாற்று வழிகளில் சிந்தனையை செலுத்துங்கள். புதினா, கிராம்பு, ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள், சாக்லெட் அல்லது சூயிங் கம்மை மாற்றாக எடுத்துக் கொண்டு சிகரெட்டை
மறக்கலாம். அதே போல் சிகரெட்டை கையில் பிடிப்பதை மறக்க அதற்கு பதில் வேறு எதையாவது பிடித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
