For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்!!!

By SATEESH KUMAR S
|

நீங்கள் ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் செக்ஸ் என்பது உங்கள் மனதில் முதல் விஷயமாக தோன்றாது. ஆனால் நீண்ட காலத்திற்கு அந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து தொடர்ந்து வரும் போது, நீங்கள் அதனால் உங்கள் செக்ஸ் வாழ்கையில் உண்டாகும் விளைவுகள் குறித்து யோசித்தே ஆக வேண்டும்.

சில நோய்கள் நாள்பட்ட நிலையில் உங்கள் செக்ஸ் வாழ்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கவே செய்கிறது. அந்த விதமான பொதுவான சில நோய்களின் பட்டியல் இதோ!

மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

இரத்தத்தில் உள்ள கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் சர்க்கரையின் அளவினால் நம் உடலில் பல சிக்கல்களும் பாலியல் சீர்கேடும் உண்டாகிறது. நீரிழிவு நோய் காணப்படுகிற 60-70% ஆண்கள் தங்கள் வாழ்ப்கையில் தங்கள் வாழ்கையில் விறைப்பு தன்மை குறித்த பிரச்சனைகளை சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆணுறுப்பிற்கு செல்கின்ற இரத்த ஓட்டம் பாதிப்படைவதாலேயே இது தோன்றுகிறது. கூடுதலாக நீரிழிவு நோய் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. இதன் விளைவாக விறைப்பு தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதற்கான சமிக்ஞைகளை பெறுவதில்லை.

மன அழுத்தம்

மன அழுத்தம்

நீங்கள் ஆரோக்கியமான செக்ஸுவல் வாழ்க்கையை வாழ, உங்களுக்கு அது குறித்து முதலில் ஆசை இருக்க வேண்டும். அனைத்து ஆசைகளும் மூளையிலே தோன்றுகின்றன. எனவே செக்ஸுவல் ஆசையை கட்டுப்படுத்தும் மூளை பகுதியின் சமிக்ஞை அமைப்பில் ஏதேனும் தவறு நேரிட்டால் அது உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பிரச்சனை நாள்பட்ட மன அழுத்தத்தை சந்திக்கும் மக்களில் காணப்படுகிறது. இதில் கவலை கொள்ள வேண்டிய விஷயம் யாதெனில் மன அழுத்தத்தை தடுப்பதற்காக பரிந்துரைக்கப்படும் மன அழுத்த தடுப்பு மருந்துகளுமே செக்ஸுவல் ஆசையை அழிக்கிறது மற்றும் அது குறித்த விழிப்புணர்வையும் குறைக்கிறது.

இரத்த நாள நோய்கள்

இரத்த நாள நோய்கள்

பிறப்புறுப்பு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு சீர்குலைவு ஏற்படுத்தும் எந்த ஒரு விளைவும் பாலியல் பிறழ்ச்சிக்கு காரணமாக அமைந்து, ஆரோக்கியமான செக்ஸ் வாழ்கையில் குறுக்கீட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்த நாளங்களுடன் தொடர்புடைய நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் தமனிகள் கடினப்படுதல் போன்றவை ஆண்களில் விறைப்பு தன்மை பிரச்சனையையும், பெண்களில் லுப்ரிகேஷன் பற்றாக்குறை பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.

முதுகு வலி

முதுகு வலி

முதுகு வலி உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நேரடியாக பாதிப்பதில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி செக்ஸ் வாழ்கையில் பங்கெடுப்பதை குறைத்து மறைமுகமாக பாதிக்கிறது. முதுகு தண்டுடன் தொடர்புடைய பிரச்சனைகளான ஹெர்னியேட்டட் வட்டு மற்றும் முதுகுத்தண்டு சுருங்கல் போன்றவை உங்களுக்கு வலியை ஏற்படுத்தி, செக்ஸ் வாழ்கையில் ஈடுபடும் உங்கள் திறனை பெருமளவிற்கு பாதிக்கின்றன. ஒரு ஆய்வு சம்பந்தமான கணக்கெடுப்பிற்கு பதிலளித்தவர்களில் 61% முதுகு வலியின் காரணமாக தாங்கள் செக்ஸை தவிர்ப்பதாகவே கூறியுள்ளனர். எனவே உங்கள் முதுகானது வலியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் ஆழமான பிரச்சனைகள் ஏதும் இல்லையெனில் யோகா மற்றும் பல உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் முதுகினை செயல்திறனுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை உங்கள் செக்ஸ் வாழ்வில் பெரிய அளவில் பாதிப்புகளை காட்டாமல் இருக்கலாம். ஆனால் இது உங்கள் செக்ஸ் உணர்வுகளை குறைத்து, உங்களை பலவீனமடைய செய்கிறது. ஆண்களில் செக்ஸ் ஆசையை குறைகிறது மற்றும் விறைப்பு தன்மை குறித்த பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. மற்ற பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் இதனை நம் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்கள் செய்து எளிதாக சரி செய்து விட முடியும்

மாதவிடாய்

மாதவிடாய்

ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை பெண்களின் செக்ஸுவல் ஆசையை தக்க வைத்து கொள்ள அவசியம். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பெண்களில் செக்ஸுவல் ஆசையை இழக்கவும், அடிகடி செக்ஸில் பங்கெடுப்பதை குறைக்கவும், செக்ஸின் போது வலியை உணரவும் காரணமாக அமைகின்றது. ஆனால் இந்த சிக்கலை சரியான ஆலோசனையையும், சிகிச்சையையும் வழங்குவதன் மூலம் சரி செய்து விட முடியும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 6 Health Problems Ruining Your Libido

Sex might not be the first thing on your mind when you’re suffering from a health problem. But with health issues that stick around for a long period of time, you should think about their effects on your sex life.
Desktop Bottom Promotion