Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
பாஸ்ட் ஃபுட் உணவுகளினால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமா? இத படிச்சு பாருங்க...
துரித உணவுகளை நாம் ஒவ்வொருவரும் விரும்பக் காரணம் அதன் சுவையே! ஆனால், இந்த சுவை அளவுக்கு அதிகமான கொழுப்பு மற்றும் உப்பினால் கிடைக்கிறது. ஆனாலும் நீங்கள் துரித உணவுகளை விரும்பி சாப்பிடத் தடையேதும் இல்லை.
ஆனால் அப்படி சாப்பிடும் போது அவற்றில் எவற்றை உணவில் சேர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து. ஆகவே எந்த பாஸ்ட் ஃபுட் கடைக்கு சென்றால், என்ன சாப்பிடுவது நல்லது என்று கொடுத்துள்ளளோம். அதன் படி தேர்வு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்!!!

மெக்டொனால்டு
மெக்டொனால்டு ஒரு உண்மையான சூப்பர் சைசர் ஆகவும், கொழுப்புகளை கொடுப்பதில் சூப்பர் சைஸ் உணவாகவும் உள்ளது. பிக் மேக்-ல் 540 கலோரிகளும், 34 கிராம் கொழுப்பும் உள்ளது. இதற்கு மாறாக, ஒரு ஹம்பர்கரையும், சைட் சலாட்டையும் சாப்பிடலாம். இதனால் நீங்கள் திருப்தி அடைவதுடன், 200 கலோரிகளை சேமிக்கவும் முடியும். நொறுக்குத் தீனியை சாப்பிட நீங்கள் விரும்பினால், மெக்ஃப்ளர்ரிக்கு சென்று, சாதாரண வெண்ணிலா ஐஸ் க்ரீமை சாப்பிட்டு, 300 கலோரிகளை சேமிக்கலாம்.

பர்கட் கிங்
பர்கர்களின் மன்னனாக விளங்கும் சீஸ் சேர்ந்த டபுள் வோப்பரில் 990 கலோரிகளும், 64 கிராம் கொழுப்பும் உள்ளதால், ஒரு நாள் முழுமைக்குமான கலோரிகளை அது கொண்டிருக்கிறது எனலாம். இந்த மெனுவில் எதை வேண்டுமானாலும் சிறந்த தேர்வாக எடுக்க முடியும். நீங்கள் ஹம்பர்கர் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், வோப்பர் ஜுனியர் சாண்ட்விச்சை, மயோ இல்லாமல் சாப்பிடலாம். இதில் 290 கலோரிகளும், 12 கிராம் கொழுப்பும் மட்டுமே இருக்கும்.

கேஎஃப்சி
கேஎஃப்சி தன்னுடைய பெயரின் நடு எழுத்தைப் போலவே வறுத்த உணவுகளை கொடுத்தாலும், அந்த உணவுகளில் அதிகளவிலான கொழுப்பும், கலோரிகளும் உள்ளன. அதன் முறுவலான ஸ்ட்ரைப்களில் 400 கலோரிகளும், 24 கிராம் கொழுப்புகளும் உள்ளன. மென்மையாக பொரிக்கப்பட்ட சிக்கனில் 250 கலோரிகளும், 11 கிராம் கொழுப்பும் மட்டுமே உள்ளன. அரைக்கப்பட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் கிரேவியில் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் 130 கலோரிகளும், 4.5 கிராம் கொழுப்பும் மட்டுமே இருப்பதால், 190 கலோரிகளும், 11 கிராம் கொழுப்புகளும் உள்ள கோல்ஸ்லாவிற்கு பதிலாக தேர்ந்தெடுக்கலாம்.

பிட்சா ஹட்
இந்த விஷயத்தின் பிட்சா ஹட் மிகவும் நல்லதாக உள்ளது. அதிகளவு கொழுப்பைக் கொண்ட சீஸைக் கொண்டு பிட்சா தயாரிக்கப்படுகிறது. வெஜ் பிட்சாவில் 500 கலோரிகளும், 23 கிராம்கள் கொழுப்பும் உள்ளன. அதே நேரம், இறைச்சியுள்ள பிட்சாவில் 760 கலோரிகளும், 41 கிராம்கள் கொழுப்பும் உள்ளன. எனவே, வெஜ் பிட்சாக்களை தேடி தின்று மகிழ்வது கொழுப்பைக் குறைக்க உதவும்.

மனதில் கொள்ள வேண்டியவை
துரித உணவுகளில் கலோரிகள், உப்பு மற்றும் கொழுப்பு ஆகிய பல விஷயங்கள் எங்கெங்கிலும் நிறைந்துள்ளன. பல்வேறு துரித உணவகங்களிலும் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ள பல்வேறு உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகின்றன. நீங்கள் கூட அதை கேட்டு வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், இவற்றிலுள்ள சில பிரபலமான உணவுகள் நீங்கள் எடையை குறைக்க விரும்பும் வேளைகளில் மிகவும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன.

அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை
ஒருவேளை அடிக்கடி துரித உணவகங்களுக்கு சென்று வருபவர் என்றால், எந்த உணவு பாதுகாப்பானது மற்றும் எந்த உணவை ஒதுக்கலாம் என்று அறிந்திருப்பது மிகவும் நல்லதாகும். இணையத்திற்கு சென்று இது போன்ற துரித உணவகங்களைப் பற்றிய விபரங்களை நீங்கள் சேகரிக்கலாம். அவர்களுடைய உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளின் ஊட்டசத்து அளவுகள் பற்றிய விபரங்கள், இணையத்தில் கிடைக்கவில்லையெனில், அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து விபரம் பெறலாம்.
இவ்வாறு எதை சாப்பிடுவது மற்றும் எதை விடுவது என்று தெரிந்து கொள்வதன் மூலம், உடல் எடையை அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் குறைக்க முடியும்.



Click it and Unblock the Notifications