Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
தியானம் செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நன்மைகள்!!!
தியானம் என்றால் அமைதி என்று பொருள். பிறக்கும் போது நம் காதில் விழத் தொடங்கிய அழுகை என்ற ஓசையைத் தொடர்ந்து, நம்முடைய அமைதியான வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது. 10 மாதங்கள் வயிற்றில் குழந்தையாக இருந்த நாமெல்லோரும், அடுத்து வரும் நாட்களில் அந்த அமைதியை தொலைத்து நின்றிருப்போம்.
இப்படிப்பட்ட அமைதியற்ற வாழ்க்கையினால் நமது உடலும், உள்ளமும் அடையும் மாற்றங்கள் முழுமையும் நன்மை என்று சொல்வதற்கில்லை. அப்படியானால் பிறந்ததே நன்மைக்கில்லை என்று யோசிக்க வேண்டாம். அமைதியற்ற இந்த உலகில் அமைதியைத் தரும் விஷயத்தை செய்வதன் பலன்களைப் பற்றித் தான் இந்த கட்டுரை உங்களுக்கு விளக்கப் போகிறது.
நீங்க காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...
நமது பாரம்பரியத்துடன் கலந்திருக்கும் தியானம் தான் அந்த அமைதியை மீட்டுத் தரும் அருமருந்தாக உள்ளது. தினமும் 30 நிமிடங்கள் தியான நிலையில் மனதை வைத்திருந்தால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய தியானத்தை முறையாகப் பயிலவும், பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை ஒரு அமைதியான பயணமாகவே இருக்கும். அந்த தியானம் செய்வதன் காரணமாக நமக்கு கிடைக்கும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது!
ஜர்னல் ஆஃப் ஹெல்த் சைக்காலஜி என்ற இதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், தியானத்தால் மனதை நிறைவாக வைத்திருப்பது குறைவான மன அழுத்த உணர்வைத் தருவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் குறைவாக சுரப்பதுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

உண்மையான முகத்தை அறிய உதவுதல்
தியானத்தால் நெறிமுறைகளுடன் இருக்கும் போது, நம்மால் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்ப்பதை விடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும். சாதாரணமாக இருக்கும் 'பிளைன்ட் ஸ்பாட்ஸ்' எனப்படும் மனதின் இருண்ட பகுதிகளை வெற்றி கொள்ள நெறிமுறைகள் உதவும் என்று ஜர்னல் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நிதர்சனத்தைத் தாண்டி, நாம் செய்யும் தவறுகளை அவை வெளிப்படுத்தவும் அல்லது குறைக்கவும் செய்கின்றன.

மூட்டு வலிக்கு உதவி செய்தல்
2011 ஆம் ஆண்டில் அன்னால்ஸ் ஆஃப் ரியூமேட்டிக் டிசீஸ் ஜர்னலால் (Annals of Rheumatic Disease) செய்யப்பட்ட ஆய்வுகள், தியான நெறிமுறைகளுக்கான பயிற்சியின் மூலம் நாள்பட்ட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களின் வலி குறையாவிட்டாலும், அவர்களுக்கு வரும் மன அழுத்தம் மற்றும் களைப்பை குறைக்க முடிகிறது என்று சொல்கிறது.

மூளையை பாதுகாப்பான வழிக்கு மாற்றுகிறது
தியான வழிமுறையில், உடல்-மனம் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சியளிப்பதன் மூலம் மன ரீதியான நோய்கள் வராமல் மூளையைப் பாதுகாக்க முடியும். தியானப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளைக்கு அக்ஸோனல் டென்சிட்டி (axonal density) என்ற சிக்னல் தொடர்புகள் செல்வது அதிகரிக்கிறது. அதேப்போல சின்குலேட் மூளைப் பகுதியின் முன்னால் உள்ள ஆக்ஸன்களைச் சுற்றிலும் மையிலின் என்ற பாதுகாக்கும் தசையின் அளவும் அதிகரிக்கிறது.

இசையை நன்றாக கேட்கச் செய்கிறது
மனது நிறைந்த தியானம் செய்யும் போது நாம் இசையின் மீது வைக்கும் கவனம் மேம்படுகிறது. இதன் மூலம் நாம் எதைக் கேட்கிறோமோ அதை மிகவும் அனுபவித்துக் கேட்டு மகிழும் அனுவத்தைப் பெறுகிறோம் என்று ஜர்னல் சைக்காலஜி ஆஃப் மியூசிக் தெரிவிக்கிறது.

தியானத்தின் 4 மூலக்கூறுகளின் உதவிகள்
மனம் நிறைந்த தியானமானது, உடலின் விழிப்புணர்வு, சுய-விழிப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கவனத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற நான்கு மூலக்கூறுகளை தூண்டி நமக்கு உதவுவதாக பர்ஸ்பெக்டிவ்ஸ் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

கர்ப்பிணிகளின் மன அழுத்தத்தைக் குறைத்தல்
5-ல் ஒரு கர்ப்பிணி பெண் மன அழுத்ததத்தை எதிர்கொள்ளும் வேளையில், அதிகமான மன அழுத்தம் கொண்டிருக்கும் பெண்கள் மனம் நிறைந்த தியானமான யோகாவை செய்து வந்தால் காக்கப்படுகிறார்கள். யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் சக்தி பெற்றவர்களாகவும் மற்றும் நேர்மறை உணர்வையும் பெறுகிறார்கள்.

டீன்-ஏஜ் டென்ஷனை குறைத்தல்
மனம் நிறைந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று பள்ளியின் திட்டங்கள் வழியாக டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மன அழுத்தம், பயம் மற்றும் அச்சத்தைத் தவிர்க்க முடியும் என்று லியூவென் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

எடை குறைப்பும்... தியானமும்...
உடலில் தேவையில்லாமல் இருக்கும் சதையில் சில கிலோக்களை குறைத்து ஆரோக்கியமான எடையைப் பெற விரும்புகிறீர்களா? உங்களுக்கான சிறந்த நண்பனா மனம் நிறைந்த தியானம் உள்ளது. அமெரிக்க உளவியல் அமைப்பினால் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வு அறிக்கைகளில் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

நல்ல தூக்கம்!
இறுதியாக நமக்குத் தேவையான சிறந்த விஷயத்தை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம். உடா பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மனம் நிறைந்த தியானப் பயிற்சி நமது உணர்ச்சிகள் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுவதால், நம்மால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.



Click it and Unblock the Notifications