Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஓக்ரா என்ற பூக்கும் செடியை வெண்டைக்காய் என்ற முறையில் உலகத்தில் உள்ள பல மூலைகளிலும் தெரிந்திருக்கும். பூக்கும் செடியில் கிடைக்கும் காய் என்பதால் அதன் விலையும் அதிகம். இந்த சுவாரஸ்யமான செடியின் விஞ்ஞான பெயர் "அபெல்மோஸ்சஸ் எஸ்குலெண்டஸ்".
அனைத்து காலத்திலும் வெண்டைக்காயை சூப், கூட்டு, பொரியலாக பயன்படுத்தலாம். மேலும் அதன் எண்ணெயையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதனால் இதன் புகழ் உயர்ந்து கொண்டே தான் போகிறது. வெண்டைக்காயில் இன்னமும் பல பயன்கள் அடங்கியுள்ளது. இதில் பல விதமான உடல்நல பயன்கள் அடங்கியிருப்பதற்கு காரணம், அதிலுள்ள கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் கரிமச் சேர்மங்கள்.
அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!
வெண்டைக்காய் என்பது தோட்டத்தில் உள்ள மரபு சார்ந்த காய்கறியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இங்கு வெண்டைக்காயின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமான நலன்
வெண்டைக்காயை உங்கள் உணவில் சீராக சேர்த்துக் கொண்டால், நார்ச்சத்தை உட்கொள்வது அதிகரிக்கும். வெண்டைக்காய்யில் உள்ள சவ்வு போன்ற நார்கள் உங்கள் உணவை சுலபமாக செரிமானம் செய்ய வைக்கும். இதனால் மலங்கழித்தல் சீராக நடைபெறும். அப்படி நடப்பதால், வயிற்று பொருமல், தசை பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் அளவுக்கு அதிகமான வாய்வு போன்ற இரையக குடலிய பிரச்சனைகள் குறையும். மேலும் வயிற்று போக்கையும் இது தடுக்கும். அதற்கு காரணம் தண்ணீராக போகும் மலத்தை திண்மமாக மாற்றும். கடைசியாக உடலில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலை நார்ச்சத்து நீக்கும்.

கண் பார்வையை மேம்படுத்தும்
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக உள்ளது. அதே போல் பீட்டா கரோட்டீன், சான்தீன் மற்றும் லூட்டீன் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் உள்ளது. செல்லுலார் மெட்டபாலிசத்தின் ஆபத்தான விளைப்பொருளான இயக்க உறுப்புகளை அழிக்கவும் செயலாற்றாமல் செய்யவும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மிகவும் சக்தியுடன் செயல்படுகிறது. உடலில் உள்ள அணுக்கள் தரம் தாழ்ந்து போக இயக்க உறுப்புகளே பொறுப்பாகும். இதில் கண் பார்வையும் அடங்கும். உங்கள் உணவில் வெண்டைக்காயை அதிகமாக சேர்த்துக் கொண்டால், உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதில் மாக்குலர் டீஜெனரேஷன் மற்றும் கண்புரையும் அடங்கும்.

சரும ஆரோக்கியம்
வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். வேகமாக ஆறுதல், தழும்பு மற்றும் பருக்களின் தோற்றத்தை குறைத்தல், சுருக்கத்தை நீக்குதல் போன்றவற்றை இது மேம்படுத்தும். அதற்கு காரணம் சரும அணுக்களை பாதிக்கச் செய்யும் இயக்க உறுப்புகளை செயலாற்றாமல் செய்யும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு
வெண்டைக்காய்யில் உள்ள பலவிதமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும். ஆனால் அதிலுள்ள வைட்டமின் சி உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவிப்பதால் வெண்குருதிக்கலம் அதிகரிக்கும். இது வெளியில் இருந்து வரும் நோய் உயிரிகளை எதிர்த்து போராடி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இரத்தக்கொதிப்பு மற்றும் இதய ஆரோக்கியம்
வெண்டைக்காய்யில் வைட்டமின்கள், கனிமங்கள், பொட்டாசியம் போன்றவைகள் வளமையாக உள்ளது. இவை அனைத்தும் மனிதர்களுக்கு தேவையான அதி முக்கிய பொருட்களாகும். சோடியத்தை சமநிலைபடுத்த பொட்டாசியம் உதவுதால், உடலில் உள்ள நீர்ச்சத்தை சமநிலைப்படுத்த பொட்டாசியம் தேவைப்படுகிறது. மேலும் உங்களின் இரத்த குழாய்கள் மற்றும் தமனிகள் அமைதியாக செயல்படவும், இதயகுழலிய அமைப்பின் மீது இறுக்கம் குறையவும் பொட்டாசியம் உதவுகிறது. இதனால் இரத்த உறைதலும், தமனித் தடிப்புகளும் குறையும்.

கடைசியாக ஒரு எச்சரிக்கை
வெண்டைக்காயை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒன்றும் உள்ளது. அது தான் அதிலுள்ள அதிகப்படியான ஆக்சலேட். இந்த ஆக்சலேட் சிறுநீரகம் மற்றும் பித்தக்கல் நிலையை அதிகரிக்கும். அதற்கு காரணம் ஏற்கனவே இருக்கும் கற்களின் அளவை இது வளரச் செய்யும். வெண்டைக்காயை வதக்குவதால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டுமானால், அதனை வதக்க வேண்டாம். இதை தவிர வெண்டைக்காயை உங்களின் பிடித்த உணவாக நீங்கள் ருசித்து உண்ணலாம். அதை வைத்து புது வகையான பல உணவுகளையும் தயாரிக்கலாம்.



Click it and Unblock the Notifications











