Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை!
இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது.
பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம். பல பேருக்கு இரத்த தானம் செய்தவர்கள் கடவுளாக விளங்குகின்றனர். இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும்.
சுவாரஸ்யமான வேறு: தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம்.
இரத்த தானம் செய்வதால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றி இப்போது பார்க்கலாமா...

மாரடைப்பு
சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.

புற்றுநோய்
இரத்த தானம் செய்வது உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம்
கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உடலின் கட்டமைப்பு மேம்படும்
கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.

இரத்த அணுக்கள்
இரத்த தானம் செய்வதால் ஒருவரின் உயிரை மட்டும் நீங்கள் காப்பாற்ற போவதில்லை. கூடுதலாக உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்.

அதிகப்படியான இரும்புச்சத்து குறையும்
இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்பின் அளவு குறையும். அதனால் இரத்தம் அடர்த்தியாகி, ப்ரீ ராடிக்கல்களின் பாதிப்பு அதிகரிக்கும்.

குறிப்பு
இரத்த தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம். மேலும் வாழ்வே கேள்வி குறியாக இருக்கும் பலருக்கும் அது புது வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.



Click it and Unblock the Notifications