Latest Updates
-
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்! -
பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க! -
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. -
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம்
பலரும் அறிந்திராத, வாழை இலையின் நன்மைகள்!!!
முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில் நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள்.
அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
எனவே எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதுமட்டுமின்றி, வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், இது சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் தீர்வை வழங்கும்.
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இங்கு பலரும் அறிந்திராத வாழை இலையின் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

சீரான செரிமானம்
வாழை இலையில் உணவை உண்ணும் போது, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமானமடைய உதவுகின்றன. மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது.

நரை முடி
வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும்.

குழந்தைகளின் சரும நோய்கள்
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

காயம் மற்றும் புண்
குழந்தைகள் விளையாடுகிறேன் என்று எங்காவது விழுந்து காயம் ஏற்பட்டால், அதனை விரைவில் குணமாக்க, துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து, காயம் அல்லது புண் உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைத்து கட்டினால், காயம் அல்லது புண் விரைவில் குணமாகும்.

சின்னம்மை
சின்னம்மை விரைவில் குணமாக வேண்டுமானால், வாழை இலையில் தேன் தடவி, அதன் மேல் சில மணிநேரம் படுக்க வைக்க வேண்டும்.

சொரியாசிஸ்/சரும அழற்சி
சொரியாசிஸ் அல்லது சரும அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், நாளடைவில் குணமாகிவிடும்.

சாப்பாடு கெடுவதை தடுக்கும்
வெளியே செல்லும் போது, உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி செல்வதை விட, வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால், உணவானது கெடாமல் இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications