Latest Updates
-
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை!
இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுவோம். ஆனால் இருப்பதிலேயே இளநீர் தான் மிகவும் சிறந்தது. இதில் எந்த ஒரு கலப்படமும் இல்லாததால், இதன் கிடைக்கும் நன்மைகள் பல. அதிலும் இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்யும் குணம் வாய்ந்தவை.
கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஆகவே உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு இளநீரை பருகி வாருங்கள். மேலும் சருமம் மற்றும் கூந்தலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் நேராமல் இருக்க வேண்டுமானால், இளநீரை நேரடியாக பாதிப்படைந்த இடத்தில் பயன்படுத்தலாம். இங்கு இளநீரை குடிப்பதாலும், சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்துவதாலும் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதய நோய்
இளநீரை தினமும் குடித்து வந்தால், அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

எனர்ஜியை அதிகரிக்கும்
இளநீரை தினமும் குடித்து வந்தால், உடலின் எனர்ஜியானது குறையாமல் இருக்கும்.

நீரிழிவு
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் இளநீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

ஆன்டி-வைரஸ்
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரைக் குடித்து வந்தால், உடலில் காய்ச்சலை ஏற்படுத்திய வைரஸானது அழிந்துவிடும்.

சிறுநீரக கல்
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த பானமாகும்.

செரிமானம்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இளநீரைக் குடித்து வந்தால் செரிமானம் சீராக நடைபெறும்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும்
காலரா, வயிற்றுப்போக்கு ஆகிய காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். ஆகவே அப்போது இளநீரைக் குடித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.

தசைப்பிடிப்பு
பொட்டாசியம் குறைபாட்டினால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே இளநீர் குடித்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, தசைப்பிடிப்பு ஏற்படுவது குறையும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இளநீரைக் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வலுவான எலும்புகள்
இளநீரில் கால்சியம் அதிகம் இருப்பதால், இதனை தவறாமல் தினமும் குடித்து வர, எலும்புகளில் பிரச்சனை ஏற்படாமல், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரைக் குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

சிறுநீர்ப்பெருக்க பண்புகள்
இளநீர் சிறுநீர் பெருக்கத்தினை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றிவிடும்.

வயிற்று உப்புசம்
இளநீரைக் குடிப்பதன் மூலம், வயிற்று உப்புசத்தில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கொழுப்புக்களை குறைக்கும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இளநீர் ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

சிறுநீரகப் பாதை தொற்று
சிறுநீரகப் பாதையில் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும்.

வயிற்றுப் பூச்சிகள்
இளநீரை குழந்தைகளுக்கு தினமும் குடிக்க கொடுத்தால், அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறிவிடும்.

எடையை குறைக்கும்
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்த பின்னர் ஒரு இளநீரைக் குடித்து வாருங்கள்.

அல்சர்
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சர் விரைவில் குணமாகும்.

உடல் வெப்பத்தை தணிக்கும்
இளநீர் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை தணிக்கும்.

சரும வறட்சியை தடுக்கும்
இளநீரை குடித்து வருவதுடன், அதனை சருமத்திற்கு தடவி வந்தால், அது சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்கும்.

பொலிவான முகம்
பொலிவான முகம் வேண்டுமானால், இளநீரைக் குடியுங்கள். இது சரும செல்களை புத்துணர்வாக்கி, முகத்தைப் பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

முதுமையைத் தடுக்கும்
இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வர கூடாதெனில், இளநீரை தினமும் குடித்து வாருங்கள்.

கருமையை போக்கும்
வெயிலில் சுற்றுவதால் சருமத்தின் நிறமானது மங்கி கருமையாக இருக்கும். இத்தகைய கருமையை இளநீரை சருமத்தில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம்.

சரும தொற்றுகள்
கோடையில் சருமத்திர் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகைய தொற்றுகளை இளநீரை சருமத்தில் தடவுவதன் மூலம் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமம்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இளநீரை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, சருமம் பட்டுப் போன்று இருக்கும்.

முகப்பரு
இளநீரைக் கொண்டு முகத்தை கழுவி வந்தாலோ அல்லது மஞ்சள் தூளை இளநீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவினாலோ, முகப்பருக்கள் மறையும்.

கூந்தல் உதிர்தல்
இளநீர் குடிப்பதாலோ அல்லது அதனைக் கொண்டு மசாஜ் செய்வதாலோ, உடலில் இரத்த ஓட்டம் சீராகி, மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தலின் உதிர்தல் நின்றுவிடும்.

வறட்சியான கூந்தல்
கூந்தல் வறட்சியாக பொலிவிழந்து காணப்பட்டால், இளநீர் கொண்டு மசாஜ் செய்யுங்கள் அல்லது குளிக்கும் நீரில் இளநீர் சேர்த்து குளியுங்கள்.

முடி வெடிப்பு
இளநீரில் உள்ள லாரிக் ஆசிட், முடி வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

பொடுகு தொல்லை
பொடுகு, பேன் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டால், இளநீரைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இளநீரைப் பருகினால், அவர்களின் வயிற்றில் வளரும் சிசு ஆரோக்கியமாக வளர்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.



Click it and Unblock the Notifications