Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.
இதுப்போன்று வேறு படிக்க: தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!
அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ...

குமட்டலை குறைக்கும்
ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.

செரிமானத்தை மிகைப்படுத்தும்
செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைப்பது
தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல்
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்
வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது
பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது
இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.



Click it and Unblock the Notifications