Just In
- 13 min ago
கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தரும் பானங்கள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கோபப்பட்டா பிரச்சனையை சந்திப்பாங்களாம்…
- 18 hrs ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 18 hrs ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
Don't Miss
- Finance
ராம நவமி முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை.. கமாடிட்டி சந்தை மாலை துவங்கும்..!
- News
அய்யய்யோ.. புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு.. வல்லுநர்கள் வார்னிங் !
- Sports
சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. தொடர் சிகிச்சை!
- Automobiles
பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் சொகுசு காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... அட இவரும் வாங்கிட்டாரா!!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி.. தீயாய் பரவும் தகவல்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா... புற்றுநோய்ல இத்தனை வகையா...?
தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோய்க்கு அக்காலத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், பலர் இறந்தனர். ஆனால் தற்போது பல நவீன மருத்துவ வசதிகள் இருப்பினும் மக்கள் புற்றுநோய்க்கு பயப்படுகின்றனர். ஏனெனில் இத்தகைய புற்றுநோயில் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு புற்றுநோய்களும் உள்ளன.
உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் 7 வழிமுறைகள்!!!
மேலும் புற்றுநோய்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் என்ற சில உள்ளன. உதாரணமாக, கருப்பை, மார்பகம் போன்றவை பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள். ஆனால் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அந்த புற்றுநோய்க்கான அறிகுறி ஒரே மாதிரி மற்றவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும்.
இங்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்பக புற்றுநோய்
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்குத் தான் இந்த மார்பக புற்றுநோய் மிகப்பெரிய அளவில் தாக்கும். மேலும் இது பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரகூடியது.

சரும புற்றுநோய்
சரும புற்றுநோயானது சருமத்தில் அதிகப்படியான அளவில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே தான் வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதிய பாதுகாப்புடன் செல்லுமாறு கூறுகின்றனர்.

கருப்பை புற்றுநோய்
இந்த புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான ஒன்று. இந்த நோயில் கருப்பைக்குள் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கருப்பை புற்றுநோயானது பெண்கள் கருத்தரித்தால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால், இது அதிகம் தாக்காது.

உணவுக்குழாய் புற்றுநோய்
உணவுக்குழாய் புற்றுநோயானது புகைப்பிடிப்போருக்கு அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி, காரமான மற்றும் சூடான உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் இது ஏற்படும். ஆனால் இந்த புற்றுநோய் வந்தால் உயிர்பிழைப்பது சற்று கஷ்டமாக இருக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்
இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய். இது அதிகப்படியான அளவில் அசைவ உணவுகளின் கொழுப்பு உடலில் சேர்வதால் மற்றும் புகைப்பிடிப்பதால் புற்றுநோயை தூண்டும்.

இரத்த புற்றுநோய்
இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகமானால் ஏற்படுவது தான் இரத்த புற்றநோய். இது பெரும்பாலும் 10 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது வைரஸால் ஏற்படுவது. இது பெண்களின் கருப்பையை தாக்குவதால், இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இது நினைத்து பார்க்க முடியாத அளவில் அறிகுறிகளைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தற்போது மருந்துகள் உள்ளது.

நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் தான் இருப்பதிலேயே அதிக நபர்களை தாக்கி, உயிரைப் பறித்த புற்றுநோய். இது புகைப்பிடிப்பதால் அதிகம் வருவதுடன், அதிகப்படியான காற்று மாசுபாட்டின் காரணமாகவும் தாக்கக்கூடியது.

கருப்பைக்குரிய புற்றுநோய்
இது பெண்களைத் தாக்கும் புற்றுநோய். இது கருப்பை சுவருக்கு வெளியே வீரியம் மிக்க கட்டிகள் வளர்வதால் ஏற்படும். இதுவும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.

சிறுநீர்ப்பை புற்றுநோய்
சிறுநீர்ப்பையில் கெமிக்கல்கள் அதிகம் சேர்ந்தாலோ அல்லது அதிகம் புகைப்பிடித்தாலோ தாக்கக்கூடியது. மேலும் இதனை சரிசெய்ய அதிகம் செலவாகும். ஆகவே வருமுன் காப்பதே மேல்.

மலக்குடலுக்குறிய புற்றுநோய்
இது 50 வயதிற்கு மேற்பெட்ட ஆண்களை அதிகம் தாக்கக்கூடியது. இந்த வகையான புற்றுநோய் குடல் மற்றும் மலக்குடலுக்கு சேதம் விளைவிக்கும்.

நிணநீர் சுரப்பி புற்றுநோய்
தற்போது நிணநீர் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்க்கான காரணம் சரியாக கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், இது எச்.ஐ.வி நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது.

கணைய புற்றுநோய்
கணைய புற்றுநோய் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளையும், காய்கறிகளை குறைவாகவும் உட்கொள்வதால் வரக்கூடியது. அதிலும் நீரிழிவு நோய் இருந்தாலோ அல்லது கணைய அழற்சி இருந்தாலோ, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

வயிற்று புற்றுநோய்
ஆல்கஹால், புகைப்பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்று புற்றுநோய் வரும். இந்த புற்றுநோய் வந்தால், கடுமையான வயிற்று வலியை உண்டாக்கி, பல மக்களை அழிக்கும்.

வாய் புற்றுநோய்
அளவுக்கு அதிகமாக சூயிங் கம் மெல்லுவதாலோ அல்லது புகைப்பிடிப்பதாலோ, வாய் புற்றுநோய் தாக்கக்கூடும்.