For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!

By Super
|

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தரமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகின்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண்கள் மாதவிடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவதற்கு முன்னும் அல்லது பின்னும் மாதவிடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார்கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாதவிடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் பொதுவாக (ஆனால் எப்போதும் அல்ல) அவர்களின் 40 வயதிற்கு பிற்பகுதியில் அல்லது 50 ஆவது வயதின் ஆரம்பங்களில் தான் ஏற்படுகிறது. இந்த நேரம் பெண்களுக்கு கோபம், மன அழுத்தம். சோர்வு, ஒருவிர எரிச்சல் போன்றவை உண்டாகும். சரி, இப்போது அப்படி மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படும் சில அறிகுறிகளை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)

ஹாட் ஃப்ளாஷ், உண்மையில் மாதவிடாய் நிறுத்தத்திற்கான ஒரு அறிகுறி ஆகும். ஹாட் ஃப்ளாஷ் என்பது முகம், கழுத்து மற்றும் மார்பு மீது வழக்கத்திற்கு மாறாக திடீரென்று மிகவும் தீவிரமான வெப்ப உணர்வு ஏற்படுவது தான். ஹாட் ஃப்ளாஷ் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி திடீரென குறைந்தன் விளைவால், ஏற்பட்ட உடலின் எதிர்வினைகள் ஆகும். இந்த நேரம் பெண்களை தொட்டால் உடல் வெப்பமாகவும், முகம் சிவந்தும் பின்னர் அதிகமான வியர்வையும் உண்டாகும்.

இரவில் வியர்த்தல்

இரவில் வியர்த்தல்

இது ஹாட் ஃப்ளாஷ் ஏற்படும் போது உண்டாகிறது. நடு இரவில், திடீரென்று குளிர் ஏற்பட்டு உடனே கடுமையான வியர்வையை உண்டாக்கலாம். இந்த மிக அதிகமாக ஈரம் உள்ள உணர்வு சங்கடமானது. ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கான தவறுக்குள்ளாகாத அறிகுறியாகும்.

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம் பெரும்பாலும் மாதவிலக்கு முன் அறிகுறிகளுடன் இணைந்து போவதால் , அவைகள் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளுடன் இணைந்துக் கொள்கிறது. இதனால் திடீரென அழுகை, எரிச்சல், பெரும் மகிழ்ச்சி அல்லது மன உளைச்சல் போன்றவைகள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களின் உணர்வுகள் மாற்றமடைந்து, அவர்களது மனம் கட்டுபாடின்றி ஊசலை போல் அலையும். இதுவும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான மற்றொரு காரணமாகும்.

சோர்வு

சோர்வு

சோர்வு, வேறு பல நோய்களின் அறிகுறியாக இருக்க முடியும் நேரத்தில், இதனை மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறி பட்டியலோடு இணைத்து பார்க்கும் போது, நன்றாக மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறியாக தென்படுகிறது. சோர்வு, பொதுவான பலவீனம், சரியான அளவு தூக்கமின்மை மற்றும் அன்றாட பணிகளை முடிக்கவில்லை என்ற ஆதங்கத்தால் ஏற்படுகின்ற ஒரு பொது உணர்வு தான் என்று சோர்வு விவரிக்கப்படுகிறது.

கவலை/ தவிப்பு

கவலை/ தவிப்பு

மனநிலை மாற்றத்துடன், தவிப்பு சேர்ந்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறியாக உள்ளது. முன்னர் மிக எளிதாக செய்து முடித்த விஷயங்கள் அல்லது முந்தைய கவலைகள் அதிகரித்து, இப்பொழுது இருக்கும் விஷயங்களை பற்றி பயத்தை ஏற்படச் செய்கிறது..

பாலின உந்துதல் இல்லாமை

பாலின உந்துதல் இல்லாமை

ஹார்மோன் அளவுகள் வீழ்ச்சி அடையும் போது பாலுணர்ச்சி உந்துதல் குறைகிறது. பாலியல் எண்ணங்கள் வாழ்க்கை துணையின் வற்புறுத்தலின்றி மிகக் குறைவாக இருக்கும். மாதவிடாய் நிறுத்தத்திற்கான காலத்தில், பாலுணர்வு உந்துதலின் இழப்பு மிகவும் பொதுவான அடையாள காரணங்களில் ஒன்றான ஹார்மோன் சமநிலையின்மை ஆகும். மூன்று முக்கிய ஹார்மோன்களின் அளவுகளின் குறைப்பு பாலியல் உந்துதலில் ஆற்றல் குறைப்பை உண்டாக்குகிறது

மார்பகத்தில் வலியுணர்வு

மார்பகத்தில் வலியுணர்வு

மார்பகத்தில் வலியுணர்வு பெரும்பாலும் மாதவிலக்கு முன் அறிகுறிகளுடன் இணைந்து போவதால், அவைகள் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளுடன் தொடர்புடையதாகிறது. உடலில் வியத்தகு மாற்றங்கள் அடைவதாலும் மற்றும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்க உற்பத்தியினாலும், மார்பகங்கள் தான் முதலில் ஐயமுறும் வகையில் மென்மையாகுதல் மற்றும் வலிக்கு ஆளாகிறது.

தலைவலி

தலைவலி

ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் மாற்றத்தினால் விளையும் உபாதைகளில் தலைவலியும் ஒன்று என்று அறியப்படுகிறது. அதனால் மாதவிடாய் நிறுத்தத்தினால் தலையில் வலியை உண்டாக்குவதில் ஆச்சரியபடுவதற்கு இடமில்லை. அதிலம் வாழ்நாள் முழுவதும் தலைவலியினால் துன்பப்பட்டிருந்தால், அது இன்னும் மோசமாகலாம் அல்லது மாதவிடாய் நிறுத்தத்தின் போது மாறலாம்.

உலர் பெண் உறுப்பு/ யோனி

உலர் பெண் உறுப்பு/ யோனி

யோனி சுவர்களில் இயற்கையான வரிக்கோடுகளாகவும் மற்றும் பாலியல் விழிப்புணர்ச்சி மீது அதிகரிக்கும் உராய்வு நீக்கல் மாதவிடாய் நிறுத்தத்தின் போது குறைப்பு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் அளவு மாற்றம் மேலும் ஈஸ்ட்ரோஜன் அளவை உடலில் குறைப்பதாலும், யோனி உலர்ந்து மற்றும் அசெளகரியத்தைக் கொடுக்கிறது.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

மறுபடியும், ஹார்மோனின் ஏற்ற இறக்கங்களினால் வரும் எடை மாற்றங்கள் உட்பட உடலில் எல்லா வகையான அழிவினால் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக உடல் எடையை கூடுதல் மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஒரு அடையாளமாக இருக்க முடியும்.

அதிகமாக முடி கொட்டுதல்

அதிகமாக முடி கொட்டுதல்

உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், மயிர்கால்களில் வளர்ச்சிக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போகிறது. எனவே இதுவும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறி.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஹாட் ஃப்ளாஷ், இரவில் வியர்த்தல், மேலும் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வுகள் தூக்கத்தை குறைகிறது.

மூட்டு வலி

மூட்டு வலி

உடலின் ஹார்மோன்களின் அளவுகளுடன் மூட்டுகள் தொடர்புடையதாக இருப்பதால், மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.

விரைவான இதய துடிப்பு

விரைவான இதய துடிப்பு

பொதுவாக பெரிமெனோபாஸ் சமயத்தில் நிகழும்.

ஞாபகசக்தி குறைதல்

ஞாபகசக்தி குறைதல்

ஞாபகசக்தி குறைதல் பெரும்பாலும் தூக்கமின்மையுடனும், ஈஸ்ட்ரோஜன் குறைப்பாட்டுடனும் தொடர்புடையதாக அமைகிறது. எனவே இதுவும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 15 Signs & Symptoms of Menopause | இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!

Menopause can present itself in many ways. The most notable symptom is the tapering off of menstruation. However, before this even begins, there are many signs and symptoms of menopause that can indicate that menopause is just around the corner. Here is the top ten.
Desktop Bottom Promotion