For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

By Maha
|

தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என்பன. ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோனானது குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவதாகும். ஆனால் ஹைப்பர் தைராய்டிசம் என்றால், தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவதாகும்.

இந்த ஹைப்போ தைராய்டிசம், உடலில் வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கும். எனவே தைராய்டு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லையெனில் அவை முற்றி, உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அவசியம் படிக்க வேண்டியவை: தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

இவற்றில் இப்போது ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகளை காணலாம் என்று ஒருசில அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் முக்கியமானது, தைராய்டு முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடையானது அளவுக்கு அதிகமாக திடீரென்று நினைக்க முடியாத அளவில் அதிகரிக்கும்.

மேலும் உடல் மிகவும் சோர்வுடனும். குழந்தை பிறப்பதில் பிரச்சனையும் ஏற்படும். சரி, ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், என்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு சரிசெய்யுங்கள்.

ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை அதிகரித்தல்

எடை அதிகரித்தல்

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் பலூன் போன்று ஊதிவிடும். அவ்வாறு திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

சோர்வு

சோர்வு

தைராய்டு சுரப்பியானது சரியாக வேலை செய்யாமல் இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். அத்தகைய சோர்வானது நன்கு வித்தியாசத்துடன் தெரியும்.

மாதவிடாயில் பிரச்சனை

மாதவிடாயில் பிரச்சனை

பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் மாதவிடாய் சுழற்சியானது சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறாமல், அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரமாக நடைபெறும்.

கழுத்து வீக்கம்

கழுத்து வீக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியானது வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் நடைபெறும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஹைப்போ தைராய்டு இருந்தால், மன அழுத்தம் ஏற்படுவதோடு, மன நிலையும் சரியாக இருக்காது. எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்.

கருத்தரிப்பதில் பிரச்சனை

கருத்தரிப்பதில் பிரச்சனை

ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், கருத்தரிப்பது மிகவும் கஷ்டம். அதிலும் ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், தைராய்டு ஹார்மோன்களின் அளவு சரியாக கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கருத்தரிப்பதற்கு முயலாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அந்த பிரச்சனையுடன் குழந்தையை பெற்றெடுக்க முயன்றால், பின் அது குழந்தையின் மனநிலையை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் ஹைப்போ இருந்தால், கருத்தரிப்பதே முடியாத ஒன்றாகிவிடும்.

அதிக கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால்

தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும். அவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அதனைக் கட்டுப்படுத்த டயட் மற்றும் மருந்துகள் போன்றவற்றை மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது ஹைப்போ தைராய்டிசத்திற்கான அறிகுறியாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

மூட்டு வலிகள்

மூட்டு வலிகள்

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள் தான். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும்.

கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

அளவுக்கு அதிகமான கூந்தல் உதிர்தலும், தைராய்டு முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சில சமயங்களில் அவை வழுக்கையையும் உண்டாக்கும்.

பலவீனமான தசைகள்

பலவீனமான தசைகள்

தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வலிகளையும் உண்டாக்கும். இத்தகைய வலிகள் கடுமையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms To Know Your Thyroid Is High | தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

High levels of thyroid is one of the worst health conditions to suffer from. When thyroid levels are high, you are faced with several other health problems. Thus, it is important to know the symptoms of thyroid to detect it early and treat it immediately. To help you detect high levels of thyroid, look for these symptoms.
Desktop Bottom Promotion