Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல
வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தேவையா? இதைப் படிங்க!
சிலருக்கு வயிற்று உப்புசத்தால் வலி ஏற்படும். ஏனெனில் உடலிலுள்ள குடல்கள் நாம் உள்ளே தள்ளும் எல்லா உணவுகளையும் ஏற்றுக் கொள்ளாத போதும் மற்றும் உடலின் செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும் போதும் வரும் எரிச்சலூட்டும் குடல் நோயினாலேயே இந்த வயிற்று வலி உண்டாகிறது. வயிற்றில் கேஸ் உருவானாலும் கூட வயிற்று வலி வரலாம்.
வயிறு உப்புவதன் தொடர்ச்சியாகவே வயிற்று வலி வரத் தொடங்குகிறது. எரிச்சலூட்டக் கூடிய இந்த வலியாலும், ஓவரியன் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் வயிற்று வலி வரும். இந்த வயிற்று வலியை தவிர்க்க சில மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உள்ளன. உங்களுக்கு வயிற்று வலி இருந்தால் இங்கே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி உடனடியாக நிவாரணம் பெற முடியும்.

தண்ணீர் குடியுங்கள்
பொதுவாகவே உங்கள் அடிவயிறு சரியாக வேலை செய்யாத காரணத்தால் தான் வயிற்று வலி வரத் தொடங்கும். மலம் கழிப்பது முறையாக நடக்காமலிருத்தல், மலச்சிக்கல் மற்றும் வாயுக்கள் உருவாதல் ஆகியவற்றால் வலி உண்டாகும். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் வயற்றை சரியாக பராமரிக்க முடியும். இது வலியைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் செய்கிறது.

நடை பயணம்
உங்கள் வயிறு உப்பியும், கனமாகவும் இருப்பதாக உணர்ந்தால் வெளியே சற்றே காலாற நடந்து செல்லுங்கள். இதன் மூலம் இயற்கையான முறையில் வயிற்று வலியை குறைக்கவும் மற்றும் உடனடி நிவாரணமும் பெற முடியும். மெதுவாக நடக்க வேண்டாம், அதனால் எந்த பயனும் கிடையாது. ஒவ்வொரு சாப்பிட்ட பின்பும் சற்றே நடந்து சென்று வருவதை பழக்கமாக்கிக் கொண்டால், எதிர்காலத்தில் வயிற்று வலி வராமல் தவிர்த்திட முடியும்.

நுரையுள்ள பானங்கள் பருகுதல்
சோடா அல்லது கார்பன்-டை-ஆக்சைடு உள்ள பானங்களை குடிப்பதன் மூலம் வயிறு தொடர்பான பல்வேறு கோளறுகளை சரி செய்ய முடியும். உங்கள் வயிறு எப்பொழுதெல்லாம் கனமாகவும், கடினமாகவும் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த பானங்களை குடிப்பதால் பலன் கிடைக்கும். வயிற்றுக்குள் ஏற்கனவே உள்ள வாயுக்களுடன் வினை புரிந்து, அவற்றை வெளியேற்றும் பணியை கார்பன்-டை-ஆக்சைடு செய்து வருகிறது. இதன் மூலம் வயிறு சற்றே இதமாக இருப்பதையும், பெருமளவு வலி குறைவதையும் உணரலாம்.

புதினா சாப்பிடவும்
புதினா சாப்பிடுவதால் வயிற்றுவலியும், வயிறு உப்புசமாக இருப்பதும் பெருமளவு குறைகிறது. வயிறு உப்புசமாக இருப்பதற்கு சிகிச்சையெடுத்து விட்டால் போதும், வயிற்று வலியும் காணாமல் போய் விடும். புதினாவை தேநீரிலும், துவையலாகவும் சாப்பிடலாம். நுரையுடைய பானங்களுடன், புதினாவையும் சேர்த்து சாப்பிட்டால் அது சிறந்த பலனைக் கொடுக்கும். புதினாவுடன் பிற உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலியிலிருந்து உடனடி நிவாரணம் உறுதி. இஞ்சி, கருப்பு உப்பு (Black Salt), எலுமிச்சை சாறு போன்றவற்றுடன் புதினாவை கலந்து சாப்பிடலாம். இந்த உணவுகளில் எதை சாப்பிட்டாலும் அது வயிற்று வலியை குறைத்து, வயிற்றை இதமாக்குகிறது.

மருந்துகள்
இயற்கை வைத்தியத்தையும் மீறி வலி அதிகமிருந்தால், வயிற்று வலிக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். உடனடியாக நிவாரணம் தரக்கூடிய பல்வேறு செரிமாண மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன. மேலும், ஈனோ (Eno) போன்ற பவுடர்களாலும் வயிற்று வலியைக் குறைக்க முடிகிறது.

குறிப்பு
மெதுவாக மற்றும் சரியாக மென்று சாப்பிடுவதன் மூலமாக வயிற்றில் உணவு தங்கி விடுவதைத் தவிர்க்க முடியும். இதன் மூலம் வாயுக்கள் உருவாவதை தவிர்த்திட முடியும். உணவு முறையும், தொடர்ந்த உடற்பயிற்சியும் செரிமாணம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தவிர்க்க உதவுகின்றன. மேலும், சுகாதாரமில்லாத உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும் மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் வயிற்று வலியை விரட்ட நாம் கடைபிடிக்க வேண்டிய கடமைகளாகும்.
இந்த செயல்பாடுகளில் எதுவும் உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். சில நேரங்களில் ஆரம்ப நிலையில் எளிதில் கண்டறிய முடியாத ஓவரியன் புற்றுநோயினாலும் வயிற்று வலி வரக்கூடும். நம்முடைய ஆரோக்கியத்திற்கு முன்னர் வரும் பிரச்சனைகளை தயவு செய்து, சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
