Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கீல்வாத வலியைக் குறைக்கும் சிறந்த பாட்டி வைத்தியங்கள்!!!
பொதுவாக கீல்வாதம் முதிய வயதிலும் மற்றும் பெண்களின் இறுதி மாதவிடாய்க்கு பின்னும் வரும் ஒரு பொதுவான நாள்பட்ட நோய். இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் குருதியோட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு உயர்வாக இருப்பது ஆகும். இதனால் மோனோசோடியம் யூரிக் அமில உப்பின் படிகங்களானவை, மூட்டு ஒட்டின் நீளுந்தன்மையுள்ள சவ்வு, தசை நாண்கள் மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் ஆகியவற்றின் மீது படியும். இது கடுமையான கீல்வாதம் சார்ந்த வலிமிகுந்த தாக்கங்களாக தென்படும். இந்தத் தாக்கங்கள் யூரிக் அமில உப்புக்களை மூட்டுக்களிலும் அதனை சுற்றிலும் படிகமாக்குவதால் தொடங்குகின்றது. மேலும் இது இறுதியில் மூட்டு கீல்வாதத்திற்கு வழிவகுக்கலாம் மற்றும் மூட்டுகளிலும் பிற பகுதிகளிலும் அதிக யூரிக் அமிலத்தைப் படியச் செய்யலாம். சில நேரங்களில் மூட்டுப் பகுதியைச் சுற்றிலும் யூரிக் அமிலப் படிவை உருவாக்குகின்றது.
கீல்வாதத்தை குணப்படுத்த முடியாது என்று நினைக்க வேண்டாம். இவை குணப்படுத்தக்கூடியவை தான். அதிலும் சில எளிய பாட்டி வைத்தியங்களான வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே கீல்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம். அவை என்னவென்று பார்ப்போமா!!!

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். 10-15 நிமிடங்கள் வரை இதை செய்யலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதால் வலி மற்றும் எரிச்சல் குறையும்.

எப்சம் உப்பு
எப்சம் உப்பால் (மக்னீசியம் சல்பேட்) எரிச்சல் இருக்கும் இடத்தை (பாதம் மற்றும் மூட்டு) சிறிது நேரம் ஊற வைத்தால் வலியானது குறைக்கும். இது உடலின் மெக்னீசியம் அளவை அதிகரிப்பது, இருதய துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது. உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்டரா பெர்ரி சாப்பிடுவதும் மிகவும் நல்லது. அவை யூரிக் அமிலத்தை வினையுறச் செய்யும். பெர்ரி பழங்களில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதால் மற்றும் பொட்டசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால், இவற்றை உட்கொள்ளுதல் மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், கீழ்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.

தண்ணீர்
தண்ணீர் என்பது மிக பெரிய இயற்கை மருந்து என்பதை யாவரும் அறிவோம். தினமும் 8-10 கோப்பை தண்ணீர் பருகுவது மிகவும் அவசியம். இது உடம்பில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றி, யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும்.

வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் C அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், தக்காளி, குடை மிளகாய் ஆகியவைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல் அவசியம்.

ஆப்பிள்
ஆப்பிள்களும் கீல்வாதத்திற்கு ஒரு நல்ல நிவாரணி. அதிலுள்ள இயற்கை ஆக்சிஜனேற்றத் தடுப்பான் உடம்பை சுத்தப்படுத்த பெரிதும் உதவுவதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது அவசியம்.

செர்ரி
செர்ரிப்பழம் மற்றும் அதன் சாற்றை பருக வேண்டும். இதுவும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.

கேரட், பீட்ரூட்
கேரட், பீட்ரூட் சேர்த்து சாறு எடுத்து குடிப்பதும் மிகவும் நல்லது. ஒரு மாதத்திற்கு இதை தினம் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்.

பீன்ஸ்
பீன்ஸ் காயை சாறு எடுத்து தினமும் ஒரு கோப்பை என்று ஒரு மாத காலம் பருகினாலும் கீல்வாதத்தை தடுக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகரும் ஒரு பாட்டி வைத்தியமே. அதை இரண்டு தேக்கரண்டி அளவு தேனுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகினால், சில மணி நொடியில் வலி குறைய ஆரம்பித்துவிடும்.

உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் நாள் தவறாமல் செய்வது ரொம்ப முக்கியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதால் மூட்டு வலிகளை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். இதனால் உடற்பயிற்சியானது மூட்டு சதைகளை வலுபடுத்தும்.



Click it and Unblock the Notifications
