Latest Updates
-
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா?
இஞ்சியை சாப்பிடுவதற்கான சில ஆரோக்கிய வழிகள்!!!
இஞ்சியின் மருத்துவ குணம் அலாதியானது. அதிலும் இந்த இஞ்சியைக் கொண்டு பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர், இஞ்சியை சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த இஞ்சி காலையில் ஏற்படும் சோர்வு, தசைப் பிடிப்புகள் மற்றும் குடல் புற்றுநோயை தடுக்கவும் சிறந்தது.
மேலும் இஞ்சி வயிற்று கடுப்பு, வாந்தி, குமட்டல் போன்றவற்றை சரிசெய்யவும் வல்லது. அதுமட்டுமின்றி, இஞ்சியை சமைக்கும் போது உணவில் சேர்த்தால் உணவானது நன்கு மணத்துடன் இருக்கும். ஆகவே இஞ்சி ஆரோக்கியமானது மட்டுமின்றி சுவையானதும் கூட. இவ்வாறு பல நன்மைகளை உள்ளடக்கியுள்ள இஞ்சியை பலவாறு சாப்பிடலாம்.

இஞ்சி டீ
இஞ்சியை டீ போட்டும் குடிக்கலாம். அதிலும் 1 கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து, கொதிக்க விட்டு, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி குடித்தால், உடல் எடை குறைவதோடு, வயிற்றில் ஏற்படும் பிரச்சனையையும் சரிசெய்யலாம்.

சாலட்
துருவிய இஞ்சியில், சிறிது ஆலிவ் ஆயில், பூண்டு மற்றும் சோயா சாஸ் சேர்த்து, அதன் மேல் தேனை ஊற்றி சாப்பிட்டால், மிகவும் சூப்பராக இருக்கும்.

உணவில் நறுமணத்திற்கு...
உணவில் நறுமணத்திற்காக, சமைக்கும் போது சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து தாளித்து செய்யலாம். இதனால் உணவு நன்கு மணமாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

சூப்
விருப்பமான சூப் செய்யும் போது, இஞ்சியை சற்று அதிகமாக போட்டு செய்து குடிக்கலாம். இதனால் தொண்டையில் உள்ள பிரச்சனையை குணப்படுத்தலாம்.

இஞ்சி ஊறுகாய்
வேண்டுமெனில் இஞ்சியை ஊறுகாய் போன்றும் செய்து சாப்பிடலாம்.

இஞ்சி சிரப்
இல்லையென்றால், இஞ்சி டீ-க்கு பயன்படுத்தும் இஞ்சியை விட, இரண்டு மடங்கு அதிகமாக துருவிய இஞ்சியை போட்டு ஒரு டீ செய்து கொண்டு, பின் ஒரு பேனில் சிறிது இஞ்சி டீயை ஊற்றி, சற்று அதிகமாக தேன் சேர்த்து, அடுப்பில் வைத்து நன்கு கிளறி, கசாயம் பதத்திற்கு வந்ததும், இறக்கி குளிர வைத்து சாப்பிடலாம்.

இஞ்சி சாதம்
இஞ்சியைக் கொண்டு கலவை சாதம் செய்தும் சாப்பிடலாம். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு கலவை சாதம் கூட.

இஞ்சி மிட்டாய்
அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், இஞ்சி மிட்டாயை வாங்கி சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, வயிற்றுப் பிரச்சனையும் குணமாகும். இஞ்சி மிட்டாய் கிடைக்காதவர்கள், துருவிய இஞ்சியில் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
