For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Super
|

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாக்லெட்டை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதுவும் டார்க் சாக்லெட் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது. கடைகளில் பல விதங்களில் இவை கிடைக்கின்றன. சில சாக்லெட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றை வீட்டிலும் சிலர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

குழந்தைகள் அடம் பிடித்தாலும் வாங்கி தராத பொருளாக டார்க் சாக்லெட் இருந்தது. ஆனால் அதில் உள்ள சத்து அளவிட முடியாதது என்பதை தற்பொழுது மக்கள் புரிந்து கொண்டதால், தற்போது பெற்றோர்கள் தாமாகவே குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். கருப்பு நிறத்தில் சற்றே கசப்பும் இனிப்பும் சேர்ந்த டார்க் சாக்லெட்டை அனைவரும் உண்ண வேண்டும். ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன.

கர்ப்பக் காலத்தில் பெண்களை காபி பருகக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள் டார்க் சாக்லெட் சாப்பிடுங்கள் என்று கூறுகின்றனர். இது கொக்கோ மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையிலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். அத்தகைய சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்டைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

டார்க் சாக்லெட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வு கூறுகின்றது. ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும். அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு நல்லது

மூளைக்கு நல்லது

டார்க் சாக்லெட் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன. மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சாக்லெட் உண்ண வேண்டும்.

மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் டார்க் சாக்லெட் உதவுகின்றது. இதில் PEA உள்ளது. இதனால் காதல் உணர்வு ஏற்படும் போது கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சியை போன்று இவற்றை உண்ணும் போது அடைய முடியும். ஆகையால் டார்க் சாக்லெட் சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது

இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டார்க் சாக்லெட் உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும். ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய்டுகள் (flavonoids) இருப்பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ் (glycemic index)இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

டார்க் சாக்லெட்டில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை (radicals) போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இந்த ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலும் இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சாக்லெட் முற்றிலும் குணப்படுத்துகின்றது. அதிலும் வயதான தோற்றத்தையும், சக்தி குறைவையும் டார்க் சாக்லெட் உண்பதால் போக்க முடியும்.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்

வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து இருக்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும். இதில் பொட்டாசியமும், காப்பரும் இதயத்திற்கு நல்லது. மேலும் இரும்புச்சத்து குறைப்பாட்டை டார்க் சாக்லெட்டில் உள்ள இரும்புச்சத்து போக்குகின்றது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதால் குணமாகும்.

பல் பிரச்சனையை போக்கும்

பல் பிரச்சனையை போக்கும்

டார்க் சாக்லெட்டில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும். அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது. ஆனால் சாக்லெட் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளித்தால் போதுமானது. குறிப்பாக இந்த தியோப்ரோமைன் சளியையும் குணப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Dark Chocolate

Dark chocolate has recently been discovered to have a number of healthy benefits. While eating dark chocolate can lead to the health benefits described below.
Desktop Bottom Promotion