Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?
உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்ற செயல்களாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன.
உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்ற செயல்களாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், இரண்டு உடற்பயிற்சிகளுமே உடலுக்கும், நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன.
ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். ஆனால், ஓடுவதன் மூலமாக உங்கள் உடல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக ஏகப்பட்ட வலியும், தசைபிடிப்பும் வர வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் சைக்களில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, உடலிலுள்ள கலோரிகள் அதிகளவில் எரிக்கப்படுவதுடன், உங்களுக்கு குறைந்த அளவே சோர்வை ஏற்படுத்தும் ஒரு போக்குவரத்து சாதனமும் கிடைத்து விடும்.
ஆனால், வேலைக்கு ஓடிச் செல்லுவதை எண்ணிப் பார்க்கும் போதே நம்மவர்கள் பலரும் நாம் போட்டிருக்கும் ஃபார்மல் சட்டையைப் பாதுகாக்க கூட அது உதவாத காரியம் என்று சொல்ல முடியும்!
நீங்கள் ஓட முடிவெடுத்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால், சைக்கிள் ஓட்ட நினைத்தால் காய்கறி கடைக்கு செல்ல, பில்களை கட்டுவதற்கு என பல வழிகளில் உங்கள் தினசரி செயல்பாடுகளுடன் அதனை இணைத்து விட முடியும்.
இங்கே சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகியவற்றிற்கு இடையிலான சில அடிப்படையான வேறுபாடுகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்ற அளவீட்டை கையிலெடுக்கும் போது, ஓடுவதை விட சைக்கிள் ஓட்டுவது அதிக மகிழ்ச்சியைத் தரும் உடற்பயிற்சியாக உள்ளது. தொலைவாக செல்லும் வேளைகளில் ஓடுவதை விட, சைக்கிள் ஓட்டுவது குறைந்த வலி தரும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. மனதுக்கு அமைதி தரும் பாதையில் ஓடிக் கொண்டே இரசிப்பதை விட, சைக்கிள் ஓட்டிக் கொண்டே இரசிப்பது நடைமுறையில் சிறந்த அனுபவமாகும்.

திறன்
குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிப்பதில் திறன் மிக்க உடற்பயிற்சியாக இருப்பது ஓடுவது தான். ஒரே கால அளவில் சைக்கிள் ஓட்டுவதை விட, ஓடுவதன் மூலம் 15-20% அதிக கலோரிகளை எரித்திட முடியும். உங்களுக்கு குறைவான நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க வேண்டிய அவசியம் இருந்தால், ஓடுங்கள், ஓடுங்கள்...

பயணம் செய்தல்
இந்த ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டுவதை மிகவும் நிலைநிறுத்தும் காரணமாக உள்ளது. இரண்டுமே உடற்பயிற்சி செயல்கள் என்றாலும் கூட, நீங்கள் சைக்கிளை பயன்படுத்துவதால் ஓடும் நேரத்தை விட குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், இரண்டு மடங்கு வேகத்திலும் தொடர்ந்து செல்ல முடியும். ஃபார்மல் உடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு ஓடிச் செல்வது என்பது நடவாத காரியம் தான்.

காயங்கள்
உங்கள் உடல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் போது ஓடுவது சற்றே உங்களை பின்னோக்கி இழுக்கிறது. குறிப்பாக உங்களுடைய மூட்டுகள் அதிகளவு வலியையும், ஓடுவதால் ஏற்படும் உராய்வையும் எதிர்கொள்கின்றன. சைக்கிள் ஓட்டும் போது அது உங்கள் மூட்டுகள் மற்றும் உடல் பகுதிகளை இதமாகவே வைத்திருக்கும் வகையில் பயன்படுவதால், காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைகிறது.

உடலை வளர்த்தல்
உடலின் கீழ் பகுதிகள்-குறிப்பாக தொடை மற்றும் கால்களின் வளர்ச்சிக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் சிறந்த பயிற்சியாக உள்ளது. சைக்கிளிங் மூலம் உடலின் கீழ் பகுதிகளை வலுவானதாக உருவாக்க முடியும். ஓட்டம் என்று வரும் போது முதலில் உங்களுடைய உடல் மற்றும் தசைகளை நீட்டவும், அதைக் கொண்டு உடலை உருவாக்கவும் முடியும். இதன் மூலம் உடலை வலுவாக்க முடியும்.

கட்டுமான வசதிகள்
இப்பொழுது இருக்கும் வெளிப்புற கட்டுமான வசதிகளைப் பார்க்கும் போது, சரளை மண் சரிவுகளிலும் அல்லது புல் படர்ந்த மலைகளிலும் ஓடுவது சிறந்த அனுபவமாக இருக்கும். சைக்கிள் ஓட்டுவதற்கோ நிலையான, சமதளமான இடம் இருந்தால் தான் நிலை தடுமாறாமல் வண்டி ஓட்ட முடியும். நகரங்களிலும் கூட குறைந்த வாகனப் போக்குவரத்து உள்ள சாலைகளில் மட்டுமே பாதுகாப்பாகவும் மற்றும் சிறப்பாகவும் உங்களால் சைக்கிள் ஓட்ட முடியும்.

செலவும்... பராமரிப்பும்...
இரண்டு விஷயங்களுமே மிகவும் செலவு குறைந்த நடவடிக்கைகளாக இருந்தாலும், ஓடுவது தான் சைக்கிள் ஓட்டுவதை செலவிலும், பராமரிப்பிலும் சிறந்த விஷயமாக உள்ளது. ஓடுவதற்கு ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும், 6 மாதங்களுக்கு வேறு செலவு இருக்காது. சைக்கிள் ஓட்டுவதிலோ நிறைய மூலதனமும், தொடர்ந்து பராமரிப்பதில் சற்றே செலவும் தேவை என்பதை மறுக்க முடியாது.



Click it and Unblock the Notifications
