Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள சில சிக்கனமான டிப்ஸ்...
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும். சிறந்த மனவளத்தையும் தான். ஆனால், நாம் இன்று சாப்பிட்டு வரும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், சமையல் அறையில் சிறிது நேரம் உணவு தயாரிப்பதில் செலவழிக்காமல், அதிக விலை கொடுத்து எளிதாக கிடைக்கும் ஊட்டச்சத்து இல்லாத உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றோம். இதனால், நமக்கு பெருகி வரும் நோய்கள் தான் அதிகம். ஆகவே, வெளியில் சாப்பிடும் உணவு வகைகளை குறைத்துக் கொண்டு, வீட்டிலேயே குறைந்த செலவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டு, ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை. நம்மிடம் எத்தனை இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்வு இல்லாவிடில் அது நம் வாழ்நாள் முழுவதும் சிக்கல்களை உண்டாக்கும்.
உணவே ஆரோக்கியம் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், உணவு மட்டும் இல்லாது வேறு பல பொருட்கள் உள்ளது. ஆம், உணவு முக்கியம் தான். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், சில பொருட்களின் விலைகள் அதை பின்னுக்கு தள்ளுகின்றது. எளிதாக சொன்னால், பணம் நமது ஆரோக்கியத்தை அழிக்கின்றது. பணம் மற்றும் ஆரோக்கியத்தை பற்றிய கவலையை விட்டுத் தள்ளுங்கள்.
இதோ 10 ரூபாய்க்கும் குறைவான விலையில், உடல் நலத்தை நன்மைப்படுத்த 7 எளிய வழிகள் உள்ளன. இதனால் ஆரோக்கியத்தையும், பணத்தையும் சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.

கயிறு கட்டுதல்
மனவளத்தை மேம்படுத்தும் மற்றும் முதுகு வலியை குறைக்கும்.
தினமும் காலையில், நேராக நின்று கொண்டு வயிற்று தசைகளை நன்றாக உள்ளிழுக்கவும். பின்னர், பாதியாக வெளியில் விட்டு, ஆடைகளுக்கு உள்ளே ஒரு கயிறு கொண்டு கட்டி, நாள் முழுவதும் அப்படியே இருக்கவும். இது மூலத்தசைகளை ஈடுபடுத்தவும், வயிற்று தசைகளை குறைப்பதற்கும், உடல்வளத்தை மேம்படுத்தவும், முதுகு வலியை குறைக்க உதவும் நிரந்தர நினைவூட்டுதலாக இருக்கும்.

இரண்டு முட்டைகள்
மதியம் வரை வயிறு நிரம்பி இருக்கச் செய்யும்.
காலை உணவாக முட்டைகள் சாப்பிட்டால், அன்று முழுவதும் நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு 18% குறைகின்றது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. ஏனென்றால், இவை நம்மை நெடுநேரம் வரை வயிறு நிரம்பி இருக்கச் செய்து, மேலும் சாப்பிடுவதை தடுக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றார்கள். ஆகவே வேக வைத்த முட்டைகளை, ஒரு துண்டு முழுதானிய பிரட் டோஸ்ட் உடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

புதினா இலைகள்
வயிறு உப்புசத்தை குறைக்கும்.
புதினாவில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை நமக்கு நல்ல ஜீரண சக்தியை கொடுத்து, வயிறு உப்புசத்தையும் குறைக்கும் என மூலிகை மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். இது மேலும் நமது வாயை சுத்தப்படுத்தி, துர்நாற்றத்தை வெளியேற்றும். அதற்கு கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளை சிறிது நேரம் வைத்து உட்கொள்ளவும்.

சர்க்கரை இல்லா சூயிங் கம்
நெஞ்செரிச்சலை தணிக்கவும் மற்றும் மனஒருமித்தலை மேம்படுத்தவும் உதவும்.
சூயிங் கம் சாப்பிடுதலால் உண்டாகும் உமிழ்நீர் ஜீரண அமிலங்களை சாந்தப்படுத்தி, அந்த அமிலங்களை மீண்டும் வயிற்றுக்குள் செலுத்துகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும் ஜெர்னல் ஆப் டென்டல் ரிசர்ச் வெளியிட்ட தகவலில், சிலருக்கு நெஞ்செரிச்சல் தரக்கூடிய உணவை சாப்பிட்ட பின்னர் சர்க்கரை இல்லா சுயிங் கம்மை 30 நிமிடங்கள் மெல்லச் செய்தார்கள். இதனால் ஒரு வேலையில் அதிக நேரம் கவனம் செலுத்த முடிகின்றது என பிரிட்டிஷ் ஜெர்னல் ஆப் சைக்காலஜி வெளியிட்ட ஆய்வில் கார்டிப் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

டென்னிஸ் பந்து
அடி முதுகு நரம்பு வலியைக் குறைக்கும்.
டென்னிஸ் பந்து, பிளாஸ்டிக் ஸ்பைக்கி பந்து அல்லது உருளைகிழங்கு போன்றவை கொண்டு பின்புறம் மசாஜ் செய்து வந்தால், அடிமுதுகு நரம்பு வலி குறையும். அதற்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து அல்லது சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு, பந்தை வலிக்கும் இடத்தில் வைத்து கொள்ளவும். பின் அதனை தசைகளில் அழுத்துவதன் மூலம் அது தசை பரப்பை நேர்படுத்துகின்றது. இதனால் தசைகளின் இறுக்கம் குறையும். அதிலும் ஒரு நாளில் பலமுறை செய்து வந்தால், அதிக நிவாரணம் கிடைக்கும்.

குளிக்கும் நீரில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்த்தல்
வலிக்கும் தசைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் வயிற்றை தட்டையாக்கும்.
எப்சம் உப்புகளில் உள்ள அதிக மக்னீசியம் புண்களையும், தோய்ந்த தசைகளையும் தணிக்கச் செய்யும். இது விழாக்களுக்கு செல்லும் முன்னர் நடிகர்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒன்றாகும். அதிலும் ஒன்று அல்லது இரண்டு கையளவு உப்பை குளிக்கும் நீரில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள டாக்ஸின்களை நீக்கி வயிற்றை தட்டையாக்கும்.

கையளவு பாதாம்
இரத்தப் கொழுப்பை குறைக்கும்.
உப்பு இல்லாத பாதாமில் அதிக புரோடீன் மற்றும் நல்ல மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது. மற்ற தானியங்களை ஒப்பிடுகையில் பாதாமில் அதிக அளவிலான 6 முக்கிய ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அவை நார்ச்சத்து, மக்னீஷியம், புரோட்டீன், பொட்டாசியம், காப்பர் மற்றும் வைட்டமின் ஈ ஆகும்.



Click it and Unblock the Notifications