Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்!
கண்களை வைத்தும் உடல் ஆரோக்கியத்தை சொல்லலாம்!!!
கண்கள் இதயத்திற்கு மட்டும் கதவுகளாக இருப்பதில்லை, உடல் ஆரோக்கியத்திற்கும் தான். இத்தகைய கண்களை வைத்து நம்மால் தற்போதுள்ள உடல் ஆரோக்கியத்தின் நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதற்காகத் தான் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிகளிடம் சென்றால், அவர்கள் முதலில் கண்களை பரிசோதிக்கின்றனர். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சனை என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம். இப்போது அதைப் படித்து உங்கள் கண்கள் எப்படியுள்ளதென்று தெரிந்து கொள்ளுங்கள்...

சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள்- கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால், அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரத்தில் அலர்ஜியின் காரணமாகவும், கண்களுக்கு போடும் மேக் கப் செட்டில் இருக்கும் கெமிக்கல்களின் மூலமாகவும் வரும். அதுமட்டுமல்லாமல், கண்களுக்கு தேவையில்லாமல் கண்களுக்கான மருந்துகளை பயன்படுத்தினாலும் ஏற்படும். ஆகவே இது ஒரு கண்களை வைத்து, ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
வெளிர் நிற கண்கள்- வெளிரி நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் அனிமியா முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறி. அதாவது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கண்கள் வெளிர் நிறத்தில் இருக்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள் நிற கண்கள்- இந்த நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காததால் ஏற்படுகிறது. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.
வீக்கமான கண்கள்- கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவும் தைராய்டிசத்தில் ஒன்றான, ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாக உள்ளது. ஆகவே அப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால் சில சமயங்களில், அது எந்த வித காரணமும் இல்லாமல் இருக்கலாம். ஆகவே என்னவோ, கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறதென்று யாராவது கூறினாலோ, உங்களுகே தோன்றினாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வறட்சியான கண்கள்- கண்கள் வறட்சியுடன் காணப்பட்டால், உடல்நிலையில் குறைபாடு மிகுந்துள்ளதை காட்டுகிறது. மேலும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளது. இதனால் உடலில் நோய்கள் எளிதில் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிலையில் இருந்த தவிர்க்க, நிறைய தண்ணீரை பருக வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்ண வேண்டும்.
என்ன நண்பர்களே! இப்போது உங்கள் கண்கள் எப்படி இருக்கின்றது, அதனால் உங்கள் உடல் நிலை எப்படியுள்ளது என்பதை அறிந்து கொண்டீர்களா?
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications