Latest Updates
-
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா?
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Jupiter Transit In Magha Nakshatra 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இது தவிர அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அத்துடன் மகம் நட்சத்திரத்திற்குள்ளும் நுழையவுள்ளார். இந்த மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆவார். இப்படி கேதுவின் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
சிம்மம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


