Latest Updates
-
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Mumbai Tawa Pulao Recipe in Tamil: மதியம் சிம்பிளான அதேசமயம் சுவையான உணவை சமைக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் அட்டகாசமான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், கொஞ்சம் காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி மும்பை ஸ்டைல் ரோட்டுக்கடை தவா புலாவ் செஞ்சு பாருங்க.

இந்த தவா புலாவ் மும்பையின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமானதாகும். வழக்கமான பிரியாணி, புலாவ் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த தவா புலாவ் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த தவா புலாவ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். இதை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்தனுப்பலாம்.
உங்களுக்கு இந்த மும்பை ரோட்டுக்கடை தவா புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் பட்டர்
- 1 ஸ்பூன் சீரகம்
- ½ வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- 3 ஸ்பூன் பட்டாணி
- 1 கேரட், நறுக்கியது
- 2 தக்காளி, நறுக்கியது
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3 ஸ்பூன் பாவ் பாஜி மசாலா
- 1 ஸ்பூன் உப்பு
- 2 ஸ்பூன் தண்ணீர்
- 1 உருளைக்கிழங்கு, வேகவைத்தது
- 4 ஸ்பூன் கொத்தமல்லி, நறுக்கியது
- 2 கப சமைத்த சாதம் (பாஸ்மதி அரிசி)
- 2 பச்சை மிளகாய், கீறியது
- ½ எலுமிச்சைச்சாறு
செய்முறை:
- முதலில், ஒரு பெரிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் ஆகியவற்றைச் சூடாக்கி, 1 ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- சீரகம் பொரிந்ததும் நறுக்கிய அரை வெங்காயம் மற்றும் 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய குடைமிளகாய், 3 ஸ்பூன் பட்டாணி, 1 கேரட் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து, காய்கறிகள் மொறுமொறுப்பாக மாறும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 3 ஸ்பூன் பாவ் பாஜி மசாலா மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- மசாலாக்கள் காய்கறிகளோடு நன்கு கலக்கும் படி வதக்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மசாலா அனைத்தும் நன்றாக வதங்கும் வரை சமைக்கவும்.
- அதன்பின் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து, மசாலா நன்கு கலக்கும் வரை வரை கிளறவும்.
- பின்னர் சமைத்த பாஸ்மதி சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
- இப்போது 2 மிளகாய், 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் ½ எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெடி.



Click it and Unblock the Notifications
