Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Village Style Pulicha Keerai Paruppu Kadayal Recipe In Tamil: கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் கீரைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. அதுவும் கீரைகளில் புளிச்சக்கீரையில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டபவர்கள் இந்த கீரையை உணவில் அடிக்க சேர்த்து வந்தால், ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இப்படிப்பட்ட புளிச்சக்கீரையை பருப்பு சேர்த்து கிராமத்து ஸ்டைலில் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* புளிச்சக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பிற பொருட்கள்:
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பற்கள்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேக வைத்த பருப்பு
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவி எடுத்துக் கொண்டு,
அத்துடன் 3 கப் நீரை ஊற்றி, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம்,
பச்சை மிளகாய், நறுக்கிய புளிச்சக்கீரை, பூண்டு பற்கள் மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து கலந்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை ஒருமுறை மசித்து விட
வேண்டும்.
* பின்னர் குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து, அத்துடன் வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல்
தயார்.



Click it and Unblock the Notifications
