Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் அதிபதியாக இருக்கிறார். புதனின் இயக்கத்தின் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

செப்டம்பர் 26, 2026 அன்று புதன் சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்குள் நுழைவது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும். அவர்கள் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற நன்மைகளை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
புதனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான தொழில் மாற்றங்களை அளிக்கப்போகிறது. நீண்டகாலமாக இருந்து வந்த மன போராட்டங்கள் இப்போது முடிவுக்கு வரும், பணியிடத்தில் தலைமைப் பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் உருவாகும், புதனின் ஆசியால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் வலிமையானதாக மாறும். அவர்களின் எதிரிகளை விட அவர்களுடைய செயல்திறன் சிறப்பாக இருக்கும். இந்த ராசி மாற்றத்தால், அவர்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.
திருமண வாழ்க்கையில், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திட்டங்கள் அனைத்தும் இப்போது துல்லியமாக செயல்படும், மேலும் வெளிப்படையான தொடர்பு மூலம் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.
துலாம்
கிரக இளவரசன் துலாம் ராசிக்குள் நுழைவதால், அவர்கள் அதிக தன்னம்பிக்கையையும், பணியிடத்தில் புதிய தலைமைத்துவப் பொறுப்புகளையும் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காகப் புதிய தொடர்புகளைப் உருவாக்கிக்கொள்ளலாம். இந்த ராசி மாற்றம் அவர்களின் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது மட்டுமின்றி அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரப்போகிறது. தற்போது வேலையில் இருபவர்களுக்கு இது மிகவும் மிகவும் சாதகமான காலமாக இருக்கும். அலுவலகச் சூழல் அவர்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். மொத்தத்தில் இது அவர்களுக்கு வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தால் நேர்மறையான தொழில் முன்னேற்றத்தையும், புதிய பொறுப்புகளையும் எதிர்பார்க்கலாம். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதன் துலாம் ராசியில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து வாழ்க்கையில் பல நேர்மறையான விஷயங்கள் நடக்கத் தொடங்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்களும் முடிவுக்கு வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

