பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..

Face Packs To Enhance Skin Glow In Tamil: ஒவ்வொருவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அதற்காக பலர் பார்லர் சென்று பல்வேறு சரும பராமரிப்புக்களை மேற்கொள்வதோடு, விலையுயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் பார்லர் சென்று சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்தால் தான் அழகாக பொலிவாக முடியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு.

Top 7 Homemade Face Packs To Enhance Skin Glow Without Going To The Parlour

ஏனெனில் நம் வீட்டு சமையலறையிலேயே நமது சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தாலே, சரும ஆரோக்கியத்தையும், அமைப்பையும், அழகையும் சிறப்பாக மேம்படுத்தலாம்.

உங்களுக்கு பார்லர் சென்று நிறைய பணத்தை செலவழித்து சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முடியாதா? அப்படியானால் கவலை வேண்டாம். பார்லர் சென்று முகத்திற்கு ஃபேஸ் போட்டால் எப்படி முகம் பொலிவோடு இருக்குமோ, அந்த அளவிற்கு பலனைத் தரக்கூடிய சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

1. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. தேன் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

3. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

5. முல்தானி மெட்டி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் சிறிது தக்காளி சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.

6. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் வெதுவெதுப்பான பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.

7. வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை ஒரு பௌலில் எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 23, 2026, 19:31 [IST]
Desktop Bottom Promotion