For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுறுசுறுப்பாக இருங்க உங்களுக்கு சோர்வே ஏற்படாது!

By Mayura Akilan
|

Tips to Become Active
சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் சட்டென முடித்து விடுவார்களாம். அவர்களுக்கு சோர்வு என்பதே ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

நீங்களே முடிவெடுங்கள்

நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?. நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள். வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.

எனர்ஜி வேண்டும்

உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி'யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள். சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்

இலக்குகளை நிர்ணயுங்கள்

உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும். இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்

ஒத்திப்போடாதீர்கள்

உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள். எதை யும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்.

நேர்மையான வழி

நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது. அதேபோல் பிறர் குறை சொன்னால் கோபப்படாதீர்கள். அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்!.

நதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும். தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். நேர்மை முக்கியம் எந்த சூழ்நிலையிலும் இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்

English summary

Tips to Become Active & Lively Person! | சுறுசுறுப்பாக இருங்க உங்களுக்கு சோர்வே ஏற்படாது!

Active people can get a lot of work done with enthusiasm and tons of energy. The quality of work such people produce can also be great because of the huge amount of energy invested behind their efforts.
Story first published: Tuesday, June 5, 2012, 16:07 [IST]
Desktop Bottom Promotion