Latest Updates
-
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..
இளமையை தக்கவைக்கும் சுவையான ஆரோக்கிய பானங்கள்!!!

ஏனெனில் டயட்டில் இருக்கும் போது நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல், நன்கு பிட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கிய பானங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதோடு, இளமையோடும் காணலாம்.
தண்ணீர் : உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். எந்த நோய்கள் உடலைத் தாக்கினாலும், மருத்துவரை அணுகும் போது, அவர்கள் கூறுவது, நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு, சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து, இளமையோடு வைக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை பருகினாலே உடல் வலுவாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.
கிரீன் டீ : இது ஒரு சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்று. இதனால் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, உடலுக்கும் தான் நல்லது. டயட்டில் இருப்போர்கள் அனைவரையும் பார்த்தால், தினமும் 2-4 கப் கிரீன் டீ குடிக்கின்றனர். ஏனெனில் அவை உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளை கரைத்துவிடுகிறது. ஏனென்றால் கிரீன் டீயில் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பொருளான பாலிஃபீனால் மற்றும் EGCG (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) இருக்கிறது. ஆகவே கூந்தல் அடர்த்தியாக வளர, சரும சுருக்கங்கள் குறைய, உடல் நல்ல பிட்டாக இருக்க, தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்தால் போதும்.
தக்காளி ஜூஸ் : தக்காளியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. அதாவது லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் முதுமை தோற்றம் வராமல் தடுப்பதோடு, சருமம் நன்கு அழகாக, எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்க உதவும். தக்காளியை அப்படியே சாப்பிடப்பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும். இதனால் உடலில் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்வதோடு, குடல்களும் நன்கு வேலை செய்யும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் எளிதாக வெளியேறும் மற்றும் சருமமும் அழகாக இருப்பதோடு, சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
கொக்கோ : குறைவான அளவு காப்ஃபைன் பருகினால், இதயத்திற்கு நல்லது. ஆனால் ஒரு கப் சூடான கொக்கோவைப் பருகினால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் அழகாகவும் இருக்கும். மேலும் நிறைய ஆராய்ச்சிகள், கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், கார்னல் பல்கலைகழத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காபி, ரெட் ஒயின், கிரீன் டீ போன்றவற்றை விட கொக்கோவில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூடான கொக்கோ பிடிக்காதவர்கள், கொக்கோவை மில்க் ஷேக் போல் செய்தும் சாப்பிடலாம்.
ரெட் ஒயின் : ஒயின் ஆரோக்கிய பானம் என்று சொன்னதும் உடனே, ஒயினை வாங்கி ஃபுல்லாக குடித்துவிட வேண்டாம். ஒயினில் ரெட் ஒயின் மிகுந்த பலன்களைக் கொண்டுள்ளது. இந்த ரெட் ஒயினை குறைந்த அளவு சாப்பிட்டால், இதயத்திற்கு எந்த நோயும் வராமல் தடுப்பதோடு, உடலும் இளமையோடு, அழகாக காணப்படும். ஏனெனில் இந்த பானத்தில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள் தான், இளமைத் தோற்றத்தை தருவதோடு, வாழ்நாளையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த ரெட் ஒயினை இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய டம்ளர் மட்டும் குடித்து வந்தால், உடல் நன்கு பிட்டாக, பார்க்க அதீத அழகோடு காணப்படுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
