For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோட்டல் டிவி ரிமோட்டை தொடாதீங்க! கிருமிகள் ஜாஸ்தி!!

By Mayura Akilan
|

TV Remote
சொந்த வேலையாகவோ, அலுவலக வேலையாகவோ வெளியூர் செல்கிறீர்களா? அப்படியெனில் ஹோட்டல் அறைகளில் தங்குபவர்கள் அங்குள்ள லைட் சுவிட், டிவி ரிமோட் ஆகியவற்றை தொடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அவைகள் கிருமிகளின் கூடாரமாக இருக்கிறதாம்.

அமெரிக்காவின் ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் தலைமையிலான குழுவினர் 3 பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் குடியிருக்கும் கிருமிகளை விட ஹோட்டல் அறைகளில் உள்ள கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதேபோல் கிருமிகள் அதிகம் குடியிருக்கும் இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது என்று அதிர்ச்சி குண்டு ஒன்றினை போடுகின்றனர் ஆய்வாளர்கள்.

ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் வீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.

ஸ்டார் ஹோட்டல்களில் ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள்.

பாத்ரூம், டாய்லெட் உள்பட அறை முழுவதையும் நன்றாக கிருமிநாசினி போட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்து, அழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும், இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.

இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள், பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அவர்களின் கதி அதோ கதிதான்.

ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான், அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்; ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதையே இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

எதற்கெடுத்தாலும் சுத்தம் சுத்தம் என்று அடித்துக்கொள்ளும் அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்.... ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே !

English summary

Germiest hot spots in hotels? TV remote, light switch, study finds| ஹோட்டல் டிவி ரிமோட்டை தொடாதீங்க! கிருமிகள் ஜாஸ்தி!!

Next time you enter a new hotel room, you might think twice before touching the light switch or reaching for the remote. Those are two of the top surfaces most likely to be contaminated with potentially sickening bacteria, according to a small new study aimed at boosting cleaning practices at the nation’s hotels and motels.
Story first published: Tuesday, June 19, 2012, 10:16 [IST]
Desktop Bottom Promotion