Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மாரடைப்பு வராமல் இருக்க... 40 வயதை எட்டிய ஆண்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய 6 வைட்டமின்கள்!
Vitamins For 40-plus Men: பொதுவாக வயது அதிகரிக்கும் போது உடலில் சத்துக்கள் குறைந்து, உடலின் செயல்பாடுகள் குறையும். எனவே குறிப்பிட்ட வயதை அடைந்த பின் உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டுமானால், உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும் வகையில் குறிப்பிட்ட சப்ளிமெண்ட்டுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
அதுவும் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க ஆண்கள் 40 வயதை எட்டிய பின், தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். கீழே 40 வயதை எட்டிய ஒவ்வொரு ஆண்களும் அவசியம் எடுக்க வேண்டிய சத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. வைட்டமின் டி
வைட்டமின் டி சத்தானது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்தை உறிஞ்சவும், நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த வைட்டமின் டி சத்தைப் பெற அதிகாலை வெயிலில் 15-30 நிமிடம் இருக்க வேண்டும். அதோடு சால்டன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்புள்ள மீன்கள், பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை உட்கெள்ள வேண்டும். ஒருவேளை உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி3 சப்ளிமெண்ட்டுகளை எடுக்கலாம்.
2. கால்சியம்
கால்சியம் சத்தானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை, தசைகளின் செயல்பாடுகள் மற்றும் நரம்பு பரிமாற்றத்தை ஊக்குவிக்க அவசியமானது. இந்த கால்சியத்தைப் பெற பால் பொருட்கள், பச்சை இலை காய்கறிகள், தாவர வகை பால்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். கால்சியம் மிகவும் குறைவாக இருப்பின், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சிட்ரேட் அல்லது கால்சியம் கார்பனேட் போன்ற சப்ளிமெண்ட்டுகளை எடுக்கலாம்.
3. வைட்டமின் பி12
வைட்டமின் பி12 சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், நரம்பியல் செயல்பாடுகளுக்கும், உடலில் ஆற்றலைப் பராமரிக்கவும் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்தைப் பெற இறைச்சி, மீன், பால் பொருட்கள், செரில்கள் போன்றவற்றை சாப்பிடலாம். இல்லாவிட்டால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சயனோகோபாலமின் மற்றும் மெத்தில்கோபாலமின் போன்ற வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்டுகளை எடுக்கலாம்.
4. மக்னீசியம்
மக்னீசியம் சத்தானது தசை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது. இந்த மக்னீசியம் சத்தைப் பெற நட்ஸ், விதைகள், முழு தானியங்கள், பச்சை இலைக் காயகறிகள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். இது தவிர மக்னீசியம் சிட்ரேட் அல்லது கிளைசினேட் சப்ளிமெண்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உட்கொள்ளலாம். ஆனால் இந்த சப்ளிமெண்ட்டுகளை எடுப்பதாக இருந்தால், நன்கு சாப்பிட்ட பின் உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
5. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது உடலில் உள்ள வீக்கம் மற்றும் கொழுப்புக்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர மூளையின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த சத்தைப் பெற சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மீன் எண்ணெய் மற்றும் ஆல்கே ஆயில் சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்ளலாம்.
6. வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. அதோடு இது நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றம் கொலாஜன் உருவாக்கத்தை ஆதரிக்கிறது. இந்த வைட்டமின் சியைப் பெற சிட்ரஸ் பழங்கள், பெர்ரிப் பழங்கள், குடைமிளகாய், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். மேலும் அஸ்கார்பிக் அமிலம் அல்லது வைட்டமின் சி சப்ளிமெண்ட்டுகளை மருத்துவரின் அனுமதி பெற்று சாப்பிடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. இச்சத்துக்களை பெற அவை நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது சப்ளிமென்ட்டுகளின் மூலம் பெறலாம். அதோடு உடலில் சத்துக்களானது சரியாக உறிஞ்சப்பட வேண்டுமானால், உடல் நல்ல நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு நீரை அதிகம் பருக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications