Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
1 வயது குழந்தைக்கு மாரடைப்பை தூண்டிய வைரஸ் தொற்று - அதென்ன வைரஸ்? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
Viral Infection Triggers Cardiac Arrest: இங்கிலாந்தில் பீட்ரிக்ஸ் என்னும் 1 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்றானது உயிரைப் பறிக்கும் மாரடைப்பை தூண்டிவிட்டு, தற்போது அக்குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இதுக்குறித்து மருத்துவர்கள் கூறும் போது, அந்த குழந்தை மயோகார்டிடிஸ் என்னும் இதய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மயோகார்டிடிஸ் வைரஸ் தொற்றுகள் அல்லது ஆட்டோ இம்யூன் கோளாறுகள் காரணமாக ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் 35 வயதுடைய கெய்ரா என்பவரின் ஒரு வயது குழந்தை தான் பீட்ரிக்ஸ். இவருக்கு இன்னும் 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் கெய்ராவின் 5 குழந்தைகளும் வைரஸ் தொற்றினால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற ஃபுட் பாய்சனுக்கு உரிய அனைத்து அறிகுறிகளையும் சந்தித்துள்ளனர்.

ஆனால் இந்த 5 குழந்தைகளுள் 4 குழந்தைகள் முழுமையாக குணமடைந்துவிட்டனர். பீட்ரிக்ஸ் என்னும் 1 வயது குழந்தை மட்டும் வாந்தி, அதிக காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகளை சந்தித்ததோடு, நிலைமை நாளுக்கு நாள் மோசமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் பீட்ரிக்ஸ் சாப்பிடுவதையே முழுமையாக நிறுத்திவிட்டு, எந்நேரமும் அழுது கொண்டே இருந்துள்ளாள்.
என்ன செய்தாலும், எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. மேலும் பீட்ரிக்ஸின் கைகளும், முகமும் வீங்கி, சிறுநீர் கழிப்பதும் குறைந்துவிட்டது. எனவே கெய்ரா ஏதோ தவறாக உள்ளதாக உணர்ந்து, பீட்ரிக்ஸை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பீட்ரிக்ஸின் நிலையைப் பார்த்து, மருத்துவர்கள் உடனே பரிசோதனை செய்தனர். அந்த சோதனையின் போது தான் பீட்ரிக்ஸிற்கு மயோகார்டிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மயோகார்டிடிஸ் என்பது இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு, இரத்தத்தை பம்ப் செய்யும் திறனை குறைக்கும் நிலையாகும். முக்கியமாக பீட்ரிக்ஸை மருத்துவமனைக்கு கொண்டு வந்த அதே நாளில் அக்குழந்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் அக்குழந்தையை காப்பாற்றிவிட்டனர். தற்போது அக்குழந்தைக்கு பல்வேறு மருத்துகள் கொடுக்கப்பட்டு வருவதோடு, மரபணு சோதனைகள் செய்யப்பட்டு, வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று பார்த்து வருகின்றனர்.
மயோகார்டிடிஸ் எப்படிப்பட்ட அறிகுறியை வெளிப்படுத்தும்?
மயோகார்டிடிஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடிக்கடி மிகுந்த களைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி அல்லது இதயம் வேகமாக துடிப்பது, தலைபாரம், அடிவயிற்று வலி, அசாதாரண இதயத் துடிப்பு, மயக்கம், எந்நேரமும் பலவீனமாக இருப்பது போன்று உணர்வது போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும். அதுவும் மயோகார்டிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை இன்னும் தீவிரமாக இருந்தால், இதய செயலிழப்பின் அறிகுறிகளையும் சந்திக்கலாம்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் மயோகார்டிடிஸ் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு 1,00,000 பேரில் 10 முதல் 20 பேருக்கு இந்நிலை இருக்க வாய்ப்புள்ளது.
வைரஸ் நோய்த்தொற்றுகள் மயோகார்டிடிஸை உண்டாக்குமா?
பல நேரங்களில் மயோகார்டிடிஸிற்கான சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் நிபுணர்களின் கூற்றுப்படி, சில வைரஸ் தொற்றுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். அவை பின்வருமாறு:
* ப்ளூ
* ஹெர்பீஸ் வைரஸ் 6
* அடினோவைரஸ்
* காக்ஸ்சாக்கி வைரஸ்
* பார்வோவைரஸ் பி19
* கோவிட்- 19 வைரஸ்
மயோகார்டிடிஸ் இருந்தால் எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?
மயோகார்டிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்ற பின் பல ஆண்டுகளாக நிறைய பேர் பிரச்சனைகளின்றி வாழ்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். சிலருக்கு மயோகார்டிடிஸால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம். மேலும் இளம் வயதிலேயே மரணத்தை சந்திக்கும் 20 சதவீத பேருக்கு மயோகார்டிடிஸ் உடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
