Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்..!
Worst Foods For Liver: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான பெரிய உறுப்பு. இது அடிவயிற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. இது இரத்தத்தை வடிகட்டுவது, ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் பித்த நீரை உற்பத்தி செய்வது போன்ற முக்கியமான வேலைகளுக்கு பொறுப்பாகும்.
குறிப்பாக இது உடலை நச்சுநீக்கம் செய்வது, மெட்டபாலிசம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இது தவிர கல்லீரல் க்ளைகோஜன், வைட்டமின்கள் மற்றும் பிற பொருட்களை சேமித்து வைக்கிறது. மேலும் இது இரத்த உறைவு காரணிகளை ஒருங்கிணைக்கிறது.

இவ்வளவு பல முக்கியமான வேலைகளை செய்யும் கல்லீரல் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் ஒருசில பழக்கவழக்கங்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதுவும் மதுப்பழக்கம் இருந்தால், முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான்.
இது தவிர நம்மை அறியாமல் நாம் உண்ணும் ஒருசில உணவுகளும் கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? ஹார்வர்டு மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற டாக்டர். சௌரப் சேத்தி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய 3 உணவுகள் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1. ப்ருக்டோஸ் நிறைந்த உணவுகள்
ப்ருக்டோஸ் என்பது இனிப்புச் சுவையைத் தரும் ஒருவகையான சர்க்கரை. இது பழங்களில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆனால் சில பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பான பானங்களில் இந்த ப்ருக்டோஸ் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த ஃப்ருக்டோஸ் சோடா, மிட்டாய்கள், பேக்கரி உணவுகள் மற்றும் பல பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகை உணவுகளை ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளும் போது, கல்லீரலானது அதை கொழுப்பாக மாற்றி, கல்லீரல் செல்களுக்குள் கொழுப்பை தேங்க வைக்கிறது. இதன் விளைவாக கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும். இந்த கொழுப்புக்கள் காலப்போக்கில் வீக்கம், வடுக்கள் மற்றும் கல்லீரல் செயலிழப்பை கூட ஏற்படுத்தலாம்.
அதோடு ஃப்ரக்டோஸ் இன்சுலின் எதிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் உடல் இன்சுலினுக்கு சரியாக பதிலளிப்பதை நிறுத்தி, டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் அதிகளவிலான ஃப்ரக்டோஸ் க்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரித்து, இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
2. சோயா பீன், சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள்
சோயாபீன் எண்ணெய், சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் போன்ற எண்ணெய்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உணவகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
இந்த எண்ணெய்களை அதிகமாக உட்கொள்ளும் போது, அது ஒமேகா-3களுடன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கல்லீரல் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கு மூல காரணமாகும்.
இந்த எண்ணெய்கள் மிகவும் நிலையற்றவை மற்றும் இவற்றை சூடேற்றும் போது எளிதில் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன. அதோடு டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் லிப்பிட் பெராக்சைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவை அனைத்தும் கல்லீரல் செல்களை சேதப்படுத்துகின்றன மற்றும் கல்லீரலில் வீக்கத்தை ஊக்குவிக்கின்றன.
முக்கியமாக இந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, இது இன்னும் ஆபத்தானதாகிறது. குறிப்பாக இந்த வகை எண்ணெய்களை உட்கொள்வது சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி மற்றும் கல்லீரலை சிரமப்படுத்தும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது.
3. ஜூஸ்கள்
பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்களை பலரும் ஆரோக்கியமான பானமாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் பழங்களை விட, ஜூஸ்களில் சர்க்கரை அதிகம் நிறைந்திருப்பதோடு, அவற்றில் எவ்வித நார்ச்சத்தும் இல்லை. இந்த ஜூஸ்களை தொடர்ந்து குடிப்பதால் உங்கள் கல்லீரலில் ஃப்ரக்டோஸ் நிரப்பப்படுகிறது. இது கொழுப்பு படிதல் மற்றும் கல்லீரல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக பழச்சாறுகள் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி, கல்லீரலில் கொழுப்புச் சேமிப்பை ஊக்குவித்து, கொழுப்பு கல்லீரல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications