Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
'பெயின்கில்லர்' மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்காதீங்க - எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்! ஏன் தெரியுமா?
Painkillers: தற்போது நிறைய பேர் மருத்துவரின் அறிவுரை ஏதும் இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதுவும் உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டால், அந்த வலிக்கு நிறைய பேர் பெயின்கில்லர் மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால் இப்படி பெயின்கில்லர் மாத்திரைகளை அடிக்கடி எடுப்பது நல்லதல்ல.
அதுவும் வெறும் வயிற்றில் உட்கொள்வது பேரழிவை ஏற்படுத்தும். சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணரான டாக்டர்.சௌரப் சேத்தி வெறும் வயிற்றில் வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டின் முன்னாள் மாணவரான டாக்டர். சேத்தி, சமீபத்தில் வயிற்றில் இரத்தப்போக்குடன் அல்சரைக் கொண்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்த நோயாளிக்கு இப்படியான நிலை வருவதற்கான காரணத்தை அறிய விசாரித்த போது, அந்த நோயாளி தலைவலிக்கு தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் பெயின்கில்லர் மாத்திரைகளை எடுத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே டாக்டர். சேத்தி எப்போதும் மோர்டின்மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும் முன்பு லேசாக ஏதாவது உணவை உட்கொண்ட பின் எடுக்குமாறு பரிந்துரைத்ததோடு, வெறும் வயிற்றில் பெயின்கில்லர் மாத்திரைகளை எடுக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
வெறும் வயிற்றில் பெயின்கில்லரை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
சில சமயங்களில் மருத்துவர்கள் வெறும் வயிற்றில் சில மருந்துகளை எடுக்குமாறு பரிந்துரைக்கின்றனர் என்றால், அது மிகவும் பயனுள்ள உறிஞ்சுதலை உறுதி செய்வதற்காக செய்யப்படுகிறது. மேலும் அந்த மருந்துகள் எவ்வித பிரச்சனையும் ஏற்படுத்தாதவாறு இருக்கும். அப்படியே வெறும் வயிற்றில் மருந்துகளை எடுக்க மருத்துவரை பரிந்துரைத்தால், அது சில வகையான ஆன்டிபயாடிக்குகள், ஆஸ்துமா மருந்துகள் மற்றும் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளை நிர்வகிக்கும் மருந்துகளாக இருக்கும்.
ஆனால் ஐபுப்ரோபென், ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது வயிற்றுச் சுவர்களில் எரிச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் புண்களை உண்டாக்கி, இரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
மேலும் பெயின்கில்லரை வெறும் வயிற்றில் எடுக்கும் போது அது வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைத்து, சளி உற்பத்தியை அதிகரிக்க உதவும் புரோஸ்டாக்லாண்டினின் அளவைப் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுவும் இப்படி நீண்ட காலமாக வெறும் வயிற்றில் பெயின்கில்லரை எடுக்கும் போது, புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தி குறைந்து, அதிக அமிலத்தை சுரக்கச் செய்து, இரைப்பை குடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இரைப்பை பிரச்சனைகள், இரத்தப்போக்குடனான அல்சர், நாள்பட்ட குடல் அழற்சி நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் பெயின்கில்லரை எடுத்தால் சந்திக்கும் தீவிரமான பக்கவிளைவுகள் என்ன?
பெயின்கில்லரை வெறும் வயிற்றில் நீண்ட காலமாக உட்கொண்டால், அது பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவை:
* இரத்தக்கசிவுடன் அல்சர்
* நெஞ்செரிச்சல்
* குமட்டல் மற்றும் வாந்தி
* இரத்தப்போக்கு
* இரைப்பை, சிறுகுடல் அல்லது பெருங்குடல் சுவற்றில் துளை
* வயிற்றுப்போக்கு
* மலச்சிக்கல்
* பிடிப்புகள்
* வயிறு நிரம்பிய உணர்வு
* வயிற்று உப்புசம்
* வாய்வுத் தொல்லை
பெயின்கில்லர் எடுக்கும் போது எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
பெயின்கில்லர் மாத்திரைகளை எடுப்பதனால் எவ்வித இரைப்பை பிரச்சனைகளும் வரக்கூடாதெனில், கட்டாயம் ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த வகை மாத்திரைகளை எடுக்க வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஆனால் ஸ்நாக்ஸ் போன்று ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். அதுவும் பின்வரும் உணவுகளை உட்கொண்டாலே போதும். அவையாவன:
* நட்ஸ்
* ஊற வைத்த பாதாம்
* ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் போன்ற பழங்கள்
* கலோரி குறைவான குக்கீஸ்
* ஒரு டம்ளர் பால்
* கிக்லா அல்லது செரில்கள்
எனவே நீங்கள் இதுவரை பெயின்கில்லரை அதிகம் எடுத்து வந்தால், இனிமேல் அந்த மாத்திரைகளை எடுக்கும் முன் ஏதாவது சாப்பிட மறக்காதீர்கள். முடிந்தவரை, மருத்துவர் கூறாமல் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications