Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
உங்களிடம் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க குடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தமாம்.. நோட் பண்ணுங்க..
Signs of An Unhealthy Gut In Tamil: ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு குடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. அதுவும் தற்போது 50 வயதிற்குட்பட்டவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருவதால், வழக்கத்தை விட கூடுதலாக குடல் ஆரோக்கியத்தில் ஒருவர் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருந்தாலும், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களே குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் நாம் நினைப்பதை விட மிகவும் மோசமாக உள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒருவர் ஈடுபடாமல் இருந்தால், பின் ஒரு கட்டத்தில் குடல் புற்றுநோய் வந்து அவதிப்பட நேரிடும்.
ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதையும், குடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றியும் இப்போது காண்போம்.
1. வயிற்று உப்புசம் அல்லது வீக்கம்
பொதுவாக வயிறு நிறைய சாப்பிட்டால் வயிற்று உப்புசத்தை அல்லது வயிறு வீக்கத்தை சந்திக்க நேரிடும். அதுவும் இப்படியான பிரச்சனையை ஒருவர் சந்திக்கும் போது, அது சாப்பிட்ட ஏதோ ஒரு உணவு தான் காரணம் என்று நினைத்து, அந்த உணவைத் தவிர்ப்பார்கள். அதுவும் பருப்பு வகைகள், பயறு வகைகள் வயிறு உப்புசத்தை உண்டாக்கும் என நினைத்து, இந்த உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இப்படி தொடர்ச்சியான வயிற்று உப்புசத்தை சந்தித்தால், குடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை அணுக வேண்டும்.
2. மலம் கழிப்பதில் சிரமம்
ஒருவர் மலம் கழிப்பதைக் கொண்டும் குடல் ஆரோக்கியத்தை அறியலாம். அதுவும் மலத்தின் நிலை கொண்டு குடலில் உள்ள பிரச்சனையை அறியலாம். ஆரோக்கியமாக மலம் கழிப்பது என்பது, எவ்வித சிரமமும் இல்லாமல் மலம் கழிப்பது ஆகும். ஆனால் மலம் கழிப்பதில் சிரமத்தை சந்தித்தாலோ அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழித்து வந்தாலோ, குடல் செயல்பாடு ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். இந்நிலையில் உடனே அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.
3. உடல் சோர்வு
குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அதன் விளைவாக முடக்குவாதம், கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். இதன் மூலம் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். எனவே திடீரென்று காரணமின்றி மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 அறிகுறிகளையும் ஒருவர் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவித்து, போதுமான சிகிச்சையைப் பெற வேண்டியது அவசியம். இப்போது ஆரோக்கியமற்ற குடலை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும் சில வழிகளைக் காண்போம்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து என்பது குடல் நுண்ணுயிரிகளுக்கான உணவாகும். குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இத்தகைய நார்ச்சத்து பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், விதைகள், நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிகம் நிறைந்துள்ளன. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
பலவகையான உணவுகள்
எப்போதும் ஒரே வகையான மற்றும் ஒரே மாதிரியான உணவுகளை மட்டும் உட்கொள்ளாமல், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம், குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
புளித்த அல்லது நொதித்த உணவுகள்
நொதித்த உணவுகளான தயிர், ஊறுகாய், கிமிச்சி, கொம்புச்சா போன்றவற்றை உட்கொள்வதன் மூலம், குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலினுள் உள்ள அழற்சி/வீக்கமும் குறையும். ஆகவே குடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், இந்த வகையான உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
