Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Buttermilk Benefits: தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Buttermilk Health Benefits In Tamil: தற்போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவில் அனல் காற்றும் பலமாக வீசுகிறது. இந்த அளவு வெயில் கொளுத்துவதால் தாகம் அதிகமாக இருக்கும். எனவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த தாகத்திற்கு வெறும் தண்ணீரை மட்டும் குடித்தால் போதாது. தண்ணீருடன் உடலுக்கு நன்மைகளை வழங்குமாறான பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். அப்படிப்பட்ட மிகச்சிறந்த கோடைக்கால தாகத்தை தணிக்கும் பானம் தான் மோர்.
மோர் உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் மோர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இன்னும் நிறைய பேர் தெரியாமல் குடிக்கிறார்கள். எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. இங்கு கோடையில் மோரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய...
நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.

கொழுப்பைக் கரைக்கும்
மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உடல் வறட்சியைத் தடுக்கும்
மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை
சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்கும். அத்தகையவர்களால் பால் பொருட்கள் எதையும் சாப்பிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள் கால்சியம் சத்தை பால் பொருட்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்களில் இருந்து பெற வேண்டும். ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மோர் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. மேலும் இயற்கையான கால்சியத்தை மோரில் இருந்து பெறலாம்.

பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள்
மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

அசிடிட்டி
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

தேவையான பொருட்கள்:
தயிர் - 1/2 டம்ளர்
குளிர்ந்த நீர் - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - 2-3 இலைகள்
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாட்டிலில் தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி, அதனை மூடி நன்கு குலுக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை குலுக்கினால், மோர் ரெடி!!!
இந்த கட்டுரையின் முன்னுரை, போட்டோ, தலைப்பு ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
