அஸ்வகந்தா சிரப்பை ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Ashwagandha Syrup Benefits In Tamil: அஸ்வகந்தா என்பது மிகவும் பிரபலமான மருத்துவ மூலிகையாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் அஸ்வகந்தாவின் வேர், இலை மற்றும் அதன் பழங்களை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர். முக்கியமாக ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது.

நிறைய பேர் அஸ்வகந்தா பாலியலுணர்ச்சியை அதிகரித்து, தாம்பத்திய வாழ்க்கையை இனிமையாக வைத்துக் கொள்ள மட்டும் உதவுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அஸ்வகந்தா பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதைத் தவிர, இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மன அழுத்தம், பதட்டம், உடல் சோர்வு, நரம்பு பிரச்சனைகள் போன்றவற்றையும் சரிசெய்ய உவுகிறது.

Top 7 Benefits Of Drinking Ashwagandha Syrup In Tamil

இப்படிப்பட்ட அஸ்வகந்தாவை பலவாறு உட்கொள்ளலாம். அதில் அஸ்வகந்தா கேப்ஸ்யூல், அஸ்வகந்தா பொடி, அஸ்வகந்தா சிரப் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் இதில் அஸ்வகந்தா சிரப்பை குடிக்க நினைக்கிறீர்களா? அஸ்வகந்தா சிரப்பை தினமும் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே அஸ்வகந்தா சிரப்பை ஒருவர் தினமும் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காண்போம்.

இதயத்திற்கு நல்லது

தற்போது மாரடைப்பால் நிறைய பேர் இறந்து வருவதைக் காண்கிறோம். ஒருவருக்கு மாரடைப்பு வர காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சமநிலையின்மையுடன் இருப்பது தான். அஸ்வகந்தாவில் இதய தசைகளைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும் அஸ்வகந்தா இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மறும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே அஸ்வகந்தா சிரப்பை குடித்து வருவதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

அல்சரைத் தடுக்கும்

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு அஸ்வகந்தா ஒரு நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதுவும் இதன் சிரப்பை தினமும் குடித்து வரும் போது, அது இரைப்பையில் சுரக்கும் மொத்த அமிலத்தின் உற்பத்தியை கணிசமாக குறைத்து, இரைப்பை சுவற்றை பாதுகாக்கும். இது தவிர அஸ்வகந்தா செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

அஸ்வகந்தா இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக அஸ்வகந்தா உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அஸ்வகந்தா சிரப்பைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றல் மேம்படும்

வரவர உங்கள் நினைவில் எதுவும் நிற்பதில்லையா? ஞாபக மறதி அதிகமாக இருப்பது போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் அஸ்வகந்தாவை உட்கொள்ளுங்கள். அஸ்வகந்தாவானது நினைவாற்றல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்த உதவி புரியும். முக்கியமாக நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

மன அழுத்தம் குறையும்

தற்போதைய அவரசமான மற்றும் பரபரப்பான உலகில், பணியிடத்தில் பலரும் மிகுந்த வேலைப்பளுவை சந்திக்கிறோம். இப்படி வேலைப்பளு அதிகரிப்பதால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, இரவு நேரத்தில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணத்தை அஸ்வகந்தா சிரப் வழங்கும்.

உடல் சோர்வை நீக்கும்

அஸ்வகந்தா சிரப்பை ஒருவர் தினமும் குடித்து வருவதன் மூலம், சோர்வடைந்துள்ள உடல் நன்கு புத்துணர்ச்சி பெறும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தான், ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கக்கூடும். ஆனால் அஸ்வகந்தா சிரப்பை குடிப்பதன் மூலம், இரத்த சிவப்பணுக்களின் அளவு மேம்படும். மொத்தத்தில் அஸ்வகந்தா சிரப்பை குடித்தால், வாழ்நாளை நீட்டிக்கலாம்.

புற்றுநோயைத் தடுக்கும்

இதய நோய்க்கு அடுத்தப்படியாக புற்றுநோயால் நிறைய பேர் இறக்கிறார்கள். இப்படிப்பட்ட குறிப்பிட்ட புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க அஸ்வகந்தா உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே அஸ்வகந்தா சிரப்பை குடிப்பதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, October 10, 2023, 11:25 [IST]
Desktop Bottom Promotion