Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சுகர், பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிடுங்க..
Diabetes And Blood Pressure: உலகளவில் சுமார் 830 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சுமார் 220 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இவ்விரண்டையும் ஒருவர் சீராக பராமரிக்க வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
முக்கியமாக ஒருவரது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் நார்ச்சத்து, கொழுப்பு நீக்கப்பட்ட புரோட்டீன் மற்றும் ஆரோக்கிய கொழுப்புக்கள் நிறைந்த நல்ல சமச்சீரான உணவு இரத்த க்ளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, இன்சுலின் ரெசிஸ்டன்ஸை தடுக்க உதவுகிறது.

மேலும் உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைக் குறைப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. அத்துடன் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், பசலைக்கீரை போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது மற்றும் ஒமேகா-3 கொழுப்புக்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
அதுவும் குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இப்போது சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டியவைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. தக்காளி மற்றும் மாதுளை ஜூஸ்
தக்காளி மற்றும் மாதுளை ஆகிய இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதுவும் தக்காளியில் லைகோபைன் உள்ளது. இது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும். அதே சமயம் மாதுளை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட தக்காளி ஜூஸ் உடன் மாதுளை ஜூஸை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரும் போது, இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. ஆளி விதைகள்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. எனவே இந்த ஆளி விதைகளை காலையில் உட்கொள்வது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகின்றன. அதுவும் ஆளி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது. இப்படிப்பட்ட ஆளி விதைகளை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சுகர், பிபி கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. மஞ்சள் கலந்த எலுமிச்சை ஜூஸ்
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு அற்புதமான மசாலாப் பொருள். இந்த மஞ்சள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகின்றன. இதற்கு மஞ்சளில் உள்ள செயலில் உள்ள குர்குமின் என்னும் பொருள் தான் காரணம். இப்படிப்பட்ட மஞ்சள் தூளை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து கலந்து குடித்து வர, செரிமானம் மேம்படுவதோடு, கல்லீரலும் சுத்தமாகும்.
4. வெந்தய நீர்
வெந்தயம் உடல் சூட்டைக் குறைக்க உதவி புரியும் அற்புதமான பொருள். இந்த வெந்தய விதைகள் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த பரலவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வெந்தய விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. அதுவும் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
5. மிளகு கலந்த பட்டை நீர்
பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் சிறந்தது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இந்த பட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள பெப்பரின் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதற்கு ஒரு டம்ளர் பட்டை நீருடன், 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து காலையில் வெறும் வற்றில் குடிக்க வேண்டும். இதனால் சுகர் மட்டுமல்லாமல் உயர் இரத்த அளவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
5. நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஏராளமான சத்துக்களைக் கொண்ட பொருள். இந்த நெல்லிக்காய் இரத்த சரக்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதுவும் உதவி புரியும். அதுவும் இதில் உள்ள வைட்டமின் சி ம்ற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உவுகிறது. இப்படிப்பட்ட நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மெட்டபாலிசம் மேம்படும், நோயெர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் இரத்த சர்ச்சரை அளவு கட்டுப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











