Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
உடல் எடையைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த கலோரி குறைவான சில தென்னிந்திய உணவுகள்!
Weight Loss Foods In Tamil: தற்போது அதிக உடல் எடையால் ஒவ்வொருவரும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒருவரது உடல் எடை அதிகமாவதற்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், உணவுகளும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. உடல் எடை அதிகரித்துவிட்டால், அதைக் குறைக்க பலரும் டயட்டில் இருந்து, உடற்பயிற்சியில் தினமும் மேற்கொள்வார்கள்.
அதுவும் டயட் என்ற பெயரில் உணவுகளை சரியாக சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் தென்னிந்தியாவில் இருந்துவிட்டு, டயட்டில் இருப்பது என்று சற்று கடினம் தான். ஏனெனில் நமது தென்னிந்திய உணவுகளாது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்படி வாய்க்கு ருசியாக உணவுகளை சாப்பிட்டுவிட்டு, உடல் எடையைக் குறைக்க அந்த உணவுகளைத் தவிர்ப்பது என்பது கடினம் தான்.

ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்ற கலோரி குறைவான ஒருசில தென்னிந்திய உணவுகளும் உள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், உடல் எடையையும் குறைக்கலாம் மற்றும் எதையும் சாப்பிடாமல் பட்டினியாக கிடப்பதையும் தவிர்க்கலாம். இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த கலோரி குறைவான சில தென்னிந்திய உணவுகளைக் காண்போம்.
1. இட்லி
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு தான் இட்லி. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் இட்லியானது ஆவியில் வேக வைப்பதால், மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக கருதப்படுகிறது. இந்த இட்லி உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற அருமையான காலை உணவாக இருக்கும். ஏனெனில் ஒரு இட்லியில் வெறும் 39 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே காலையில் 2 இட்லியை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால், வயிறும் நிறையும், எடையும் குறையும்.
2. சாம்பார்
தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் சாம்பார். பருப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன், நார்ச்சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் இந்த சாம்பாரில் கலோரிகள் குறைவு. எனவே இந்த சாம்பாரை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தங்களின் உணவில் சேர்த்து வந்தால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். இப்படிப்பட்ட சம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
3. உப்புமா
பிரபலமான தென்னிந்திய உணவுகளில் உப்புமாவும் ஒன்று. என்ன உப்புமா என்றால் நிறைய பேர் தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் ரவைக் கொண்டு தயாரிக்கப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. ஒரு கப் உப்புமாவில் 200 கலோரிகள் உள்ளன. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், உப்புமாவை தினசரி காலை உணவாக உட்கொள்ளலாம். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். அதுவும் உப்புமாவை வெறும் ரவையை கொண்டு மட்டுமின்றி, ஓட்ஸ், திணை போன்றவற்றைக் கொண்டும் செய்து சாப்பிடலாம்.
4. பச்சை பயறு தோசை
வழக்கமான தோசையை விட, பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் தோசை மிகவும் ஆரோக்கியமானது. இந்த தோசையில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இதை அடிக்கடி தங்களின் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். பச்சை பயறு தோசையில் சுமார் 120 முதல் 150 கலோரிகள் உள்ளன. எனவே இது எடையைக் குறைப்போருக்கு ஏற்ற மிகச்சிறந்த காலை உணவாக இருக்கும்.
5. ரசம்
தென்னிந்தியாவில் புளி மற்றும் தக்காளியை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான ரெசிபி தான் ரசம். இந்த ரசம் கலோரி குறைவான உணவுகளுள் ஒன்று. ஒரு கப் ரசத்தில் 60 கலோரிகள் உள்ளன. மேலும் ரசமானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த ரசத்தை சூப் போன்றோ அல்லது சாதத்துடன் சேர்த்தோ உட்கொண்டால், ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதோடு, செரிமானம் சீராக நடைபெற்று, எடை இழப்புக்கு உதவி புரியும். எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் கஷ்டப்பட்டு டயட்டில் இருக்காமல், ரசத்தை குடித்து நன்மை பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications