Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
காலையில் சீரகம், ஓமம், சோம்பு ஊற வைத்த நீரை குடிச்சா.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Jeera, Ajwain And Fennel Seeds Water Benefits: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களுடன், தினசரி உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அதுவும் அதிகாலையில் எழுந்ததும் நாம் உட்கொள்ளும் ஒருசில ஆரோக்கிய பானங்கள் மற்றும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக நம் வீட்டின் அஞ்சறை பெட்டியில் உள்ள சோம்பு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதுண்டு. அதுமட்டுமின்றி இன்னும் சிலர் காலையில் எலுமிச்சை நீரை அருந்துவார்கள். இதுப்போன்று ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பழக்கங்களை அதிகாலையில் கொண்டிருப்பார்கள்.

அதுவும் சீரகம், ஓமம் மற்றும் சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படுத்தலாம் என்பது தெரியுமா? இப்போது காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சீரகம், ஓமம் மற்றும் சோம்பு ஊற வைத்த நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்
சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றிலுமே செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதில் சீரகம் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது, ஓமம் அஜீரண கோளாறை தடுக்கிறது. அதே சமயம் சோம்பு வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை தடுக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மூன்று விதைகளையும் நீரில் ஊற வைத்து ஒன்றாக எடுக்கும் போது, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
2. எடை இழப்புக்கு உதவும்
ஓமம், சீரகம், சோம்பு ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் சீரகம் மற்றும் ஓமம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் சோம்பு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை அதிகரிக்கிறது. இந்த மூன்றும் கலந்த நீரை குடித்து, போதுமான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டு வரும் போது, எடை இழப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
3. சரும ஆரோக்கியம் மேம்படும்
உங்கள் சரும ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்த விரும்பினால், முதலில் உடலினுள் நடக்கும் செயல்முறைகளை சீராக்க வேண்டும். அதுவும் செரிமானம் சீராக நடைபெற்று, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும். முக்கியமாக சோம்பு மற்றும் சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தினுள் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து, சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து மேம்படுத்த உதவுகிறது. எனவே இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
4. குடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
சோம்பு, சீரகம், ஓமம் ஆகிய மூன்றிலும் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமின்றி, குடல் நுண்ணுயிர்களையும் மேம்படுத்த உதவுகிறது. ஒருவரது குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். எனவே இந்த 3 விதைகளை ஊற வைத்த நீரை தினமும் குடித்து வரும் போது, அது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படுகிறது.
5. உடல் சுத்தமாகும்
உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா? அப்படியானால் சோம்பு, சீரகம் ஓமம் ஊற வைத்த நீர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இந்த நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த நீரை குடிக்கும் போது அது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
சீரகம், ஓமம், சோம்பு நீரை தயாரிப்பது எப்படி?
* ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் ஓமத்தை எடுத்து, அதில் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் எழுந்ததும், அந்நீரை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
