Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இந்த 3 அறிகுறிகள் தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. இல்லன்னா சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்...
High Blood Pressure Symptoms In Tamil: தற்போது இரத்த அழுத்த பிரச்சனையானது பொதுவானதாகிவிட்டது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஒவ்வொரு நாளும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டும் கொண்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. சொல்லப்போனால் இது அமைதியாக இருந்து ஒருவர் கொல்லும் அளவில் கொடியது.
பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் தங்களுக்கு இருப்பதை அறியாமல் உள்ளனர். ஏனெனில் இதன் அறிகுறிகளானது தினசரி சந்திக்கும் பிரச்சனைகள் போன்று இருப்பதால், பலர் இவற்றை புறக்கணிக்கலாம். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் பல காரணங்களால் வரலாம். அதில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், உடலுழைப்பில்லாமை, நாள்பட்ட மன அழுத்தம், அதிகமாக மது அருந்துவது, தூக்கமில்லாமை, பரம்பரை, குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால், அது கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, மார்வு அசௌகரியம், படபடப்பு போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். இது தவிர தலைச்சுற்றல், மூக்கில் இரத்தம் வடிவது, பார்வையில் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளும் தெரியக்கூடும். ஆனால் இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடாது, நிலைமை ஓரளவு முற்றியிருக்கும் நிலையில் தான் தெரியும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்காவிட்டால், பின் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றிற்கு வழிவகுத்துவிடும். கீழே உயர் இரத்த அழுத்தத்தின் 3 முக்கியமான மற்றும் பலரும் புறக்கணிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. காலை நேர தலைவலி
காலையில் எழுந்ததும் சிலர் தலைவலியை சந்திக்கலாம். பொதுவாக அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் சந்திக்க நேரிடும். ஆனால் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இப்படியான தலைவலியை சந்திக்கநேரிடும்.
அதுவும் இந்த வகையான தலைவலியானது காலையில் எழுந்ததும், தலையின் பின்புறத்தில் ஏற்படும். தூக்கத்தின் போது அல்லது அதிகாலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தான் காலையில் எழுந்தவுடன் தலைவலியை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடிக்கடி காலையில் எழுந்ததும் தலைவலியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. பார்வையில் மாற்றங்கள்
பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் இரத்த அழுத்தத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும். ஏனெனில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கண்களில் உள்ள சிறிய இரத்த குழாய்களை கடினப்படுத்தி, உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் பார்வை மங்கலாகும் மற்றும் அனைத்தும் இரண்டாக தெரியும்.
ஆனால் தற்போது நிறைய பேர் கம்ப்யூட்டர் முன் வேலை செய்வதாலும், பார்வையில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் பார்வை பிரச்சனைக்கு பலர் கம்ப்யூட்டர் முன் செய்யும் வேலை என்று காரணமாக தவறாக கருதி, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். எனவே இனிமேல் பார்வை பிரச்சனையை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி, கண் பரிசோதனை மட்டுமின்றி, இரத்த அழுத்த பரிசோதனையையும் மேற்கொண்டு பாருங்கள்.
3. உடல் சோர்வு அல்லது மந்தமான மனநிலை
காரணமில்லாமல் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமல் இருக்கலாம். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications