Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
எக்காரணம் கொண்டும் இந்த 3 உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்..!
Never Reheat These Foods: மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். அப்படிப்பட்ட உணவை உண்பதற்காகவே நாம் அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். ஆனால் தற்போது நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானதா என்றால் நிச்சயம் இல்லை. சரி, கடைகளில் விற்கப்படும் உணவுகள் தான் ஆரோக்கியமானது இல்லை என்று பார்த்தால், வீட்டில் சமைக்கும் சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது, அதுவும் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.
அனைவருக்குமே மூன்று வேளையும் நன்கு பிரஷ்ஷாக சமைத்து சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய அவசர உலகில் எதையும் வேகமாக செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில், உணவுகளை கூட சமைத்து வைத்து, பின் தேவையான போது சூடேற்றி சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சமைத்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒருசில உணவுகளை சூடேற்றி சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும் என்று கூறியதோடு, எந்த 3 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்றும் டாக்டர் ஏகம்மை மணிகண்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். அவை எந்தெந்த உணவுகள் என்பதைக் காண்போம்.
1. சாதம்
"சமைத்த சாதத்தில் பேசில்லஸ் சிரியஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருக்கும். இப்படி சமைத்த சாதத்தை சரியான முறையில் மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல், மீண்டும் சூடுபடுத்தினால், ப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்னும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனையால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வேறு சில செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட நினைத்தால், அதை முறையாக மூடி உடனே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் தேவையான போது வெளியே எடுத்து, சாதத்தை ஒருமுறை கிளறிவிட்டு, பின் சூடேற்றி சாப்பிட்டால், எவ்வித பிரச்சனையும் இருக்காது" என்று டாக்டர் கூறினார்.
2. உருளைக்கிழங்குகள்
"வேக வைத்த உருளைக்கிழங்குகளை ஒருபோதும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. ஒருவேளை அப்படி வேக வைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால், அது போட்டுலினம் என்னும் நஞ்சை உற்பத்தி செய்து, செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதுதவிர இது தசைகளையும் பாதிக்கும். ஒருவேளை வேக வைத்த உருளைக்கிழங்கை பிறகு பயன்படுத்த விரும்பினால், அதை உடனே ஒரு கண்டெய்னரில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பின் தேவையான போது எடுத்து சூடுபடுத்தினால், அது நஞ்சாக மாறாது" என்று டாக்டர் கூறினார்.
3. பசலைக்கீரை மற்றும் பிற கீரை வகைகள்
பசலைக்கீரை மற்றும் பிற கீரைகளில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவற்றை சமைத்த பின் மீதும் சூடேற்றும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, பின் நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்கும். அதே சமயம் பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடைந்துவிடும். எனவே பசலைக்கீரை மற்றும் வேறு எந்த கீரைகளையும் சூடேற்றக்கூடாது." என்று டாக்டர் கூறியுள்ளார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் இந்த உணவுகளை பலமுறை சூடுபடுத்தி சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் அவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட நினைத்தால், அவற்றை முறையாக சேமித்து, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் எடுத்து சூடேற்றுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் சமைத்த கீரைகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications