Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
தினமும் நீரில் ஊற வைத்த 10 கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Soaked Black Raisins Benefits In Tamil: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் இயற்கை நமக்கு அளித்துள்ளது. அதில் ஒன்று தான் உலர் திராட்சை. இந்த உலர் திராட்சையில் பல நிறங்கள் உள்ளன. அதில் கருப்பு நிற உலர் திராட்சை இனிப்பு பலகாரங்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு நிற திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் கருப்பு உலர் திராட்சை. இந்த சிறிய திராட்சை மிகவும் இனிப்புச் சுவையைக் கொண்டதால், நிறைய பேர் சமையலறைக்கு சென்றால், இதை சிறிது அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

பொதுவாக கருப்பு நிற உலர் திராட்சையை வெறுமனே சாப்பிட்டாலே நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த கருப்பு உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் இருமடங்கு நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா?
அதுவும் இது உடலுக்கு மட்டுமின்றி, சருமம், தலைமுடி என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதுவும் தினமும் 10 நீரில் ஊற வைத்து கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும். இப்போது தினமும் ஊற வைத்த கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. இரத்தத்தை சுத்தம் செய்யும்
கருப்பு உலர் திராட்சையில் சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது இரத்த நாளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதுவும் உலர் திராட்சையை நீரில் ஊறு வைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள அத்தியாவசியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டம் மேம்படும், கல்லீரல் சுத்தமாகும், சருமம் சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.
2. இதய ஆரோக்கியம் மேம்படும்
கருப்பு நிற உலர் திராட்சையில் பொட்டாசியம், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன. எப்படியெனில், பொட்டாசியமானது உடலில் சோடியத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. எனவே இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தினமும் நீரில் ஊற வைத்த 10 கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுங்கள்.
3. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கருப்பு நிற திராட்சையை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீருடன் உலர்திராட்சையை சாப்பிடும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன. அதோடு இதில் பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளதால், இவை உடலில் வீக்கம் மற்றும் தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும்.
4. செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்
செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. அதுவும் கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறு வைத்து, நீருடன் திராட்சையை உட்கொள்ளும் பேது, குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்றவை தடுக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருக்கும்.
5. உடல் பருமனை தடுக்கும்
கருப்பு நிற திராட்சையை நீரில் ஊற வைத்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. எப்படியெனில், ஊற வைத்த நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ளும் போது, அது பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைப்பதோடு, உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கும்.
6. இரத்த சோகையை தடுக்கும்
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 10 நீரில் ஊற வைத்த கருப்பு உலர்திராட்சையை உட்காள்ளும் போது, அது உடலில் இரத்தத்தை அதிகரிக்க உதவி புரிந்து, விரைவில் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கிறது.
7. தலைமுடிக்கு நல்லது
தினமும் கருப்பு நிற உலர்திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், அது தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களை அளித்து, தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், தினமும் இதை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
8. கண்களுக்கு நல்லது
நீரில் ஊற வைத்த கருப்பு நிற உலர்திராட்சை கண்களுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தால் கண்களில் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதோடு, முதுமை காலத்தில் சந்திக்கும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும். முக்கியமாக இந்த கருப்பு உலர் திராட்சையை உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படாது.
9. எலும்புகளுக்கு நல்லது
கருப்பு நில உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள கால்சியம் தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தும். அதுவும், இதில் போரான் என்னும் நுண் ஊட்டச்சத்து உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் திறன் கொண்டது.
10. நினைவாற்றல் அதிகரிக்கும்
கருப்பு நிற உலர் திராட்சையில் அந்தோசையனின்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுவும் இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் நியூரோஇன்ஃப்ளமேஷன் மூலம் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே மூளை சிறப்பாக செயல்பட வேண்டுமானால் தினமும் ஊற வைத்த கருப்பு திராட்சையை உட்கொண்டு வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











